/tamil-ie/media/media_files/uploads/2019/12/cats-1.jpg)
Dog dance moves viral trending video of the day
Dog dance moves viral trending video of the day : இன்று மார்கழி ஒன்று. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குளிர்காற்று வீசிவருகிறது. சென்னையிலோ காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. யாருக்கும் படுக்கையை விட்டு எழவே மனம் வராத நிலையில் இன்று திங்கள் கிழமை. வேலைக்கு செல்ல வேண்டும். பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே தூக்கத்தை கலைத்துவிடும். இந்த இதமான காலையை சுறுசுறுப்பாக்க இந்த நாய் குட்டியின் அழகான நடனத்தை பாருங்கள். நீங்கள் நிச்சயமாக இந்த நாளை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள்.
Dog dance moves viral trending video of the day
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருக்கும் வெண்டி பெரெங்குவரின் நாய்க்குட்டி இது. இந்த நாய்க்குட்டியின் பெயர் பெய்லே. வெண்டியும் பெய்லேவும் Puerto Rican இசைக்கு கிச்சனில் நின்று நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோவை வெண்டி தன்னுடைய இணைய தளத்தில் பதிவு செய்ய தற்போது அது வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் மட்டும் 1 மில்லியன் ஷேர் - ஹிட் அடித்திருக்கிறது இந்த வீடியோ. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த நாய்க்குட்டியை புகழ்ந்து தள்ளிவிட்டனர். சிலர் நிச்சயமாக ஒரு நாய்க்குட்டியை வாங்க இருப்பதாகவும் தங்கள் கருத்தினை பின்னூட்டம் இட்டுள்ளனர்.
மேலும் படிக்க : 71 வயது பேராசிரியரின் வேடிக்கையான அறிவியல் சோதனை செய்முறை விளக்கம்; வைரல் வீடியோ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us