ஆர்மி, நேவி, மருத்துவர்கள் - எல்லாரும் சேர்ந்து காப்பாற்றிய ‘பிங்க் டால்ஃபின்’ லக்கிபாய் டா நீ - வைரல் வீடியோ

ஒருபக்கம் உலக வெப்பமயமாதலை ஊக்குவிக்கும் மனிதர்கள். மற்றொரு பக்கமோ உலகை அழிவில் இருந்து மீட்க போராடும் மக்கள். ஒரு ஒற்றை உயிரைக் காக்க ராணுவப்படை, கப்பற்படை வீரர்கள் உட்பட பலரும் கை கோர்த்த இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒருபக்கம் உலக வெப்பமயமாதலை ஊக்குவிக்கும் மனிதர்கள். மற்றொரு பக்கமோ உலகை அழிவில் இருந்து மீட்க போராடும் மக்கள். ஒரு ஒற்றை உயிரைக் காக்க ராணுவப்படை, கப்பற்படை வீரர்கள் உட்பட பலரும் கை கோர்த்த இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
ஆர்மி, நேவி, மருத்துவர்கள் - எல்லாரும் சேர்ந்து காப்பாற்றிய ‘பிங்க் டால்ஃபின்’ லக்கிபாய் டா நீ - வைரல் வீடியோ

Endangered pink river dolphin : கொலாம்பியாவின் பௌட்டோ ஆற்றில் சிக்கிக் கொண்டிருந்த பிங்க் டால்ஃபினை பத்திரமாக மீட்டுள்ளனர் அந்த நாட்டு மக்களும், அதிகாரிகளும். ஆழமற்ற பௌட்டோ ஆற்றில் சிக்கிக் கொண்டு உயிரிழக்கும் தருவாயில் இருந்த இந்த பிங்க் டால்ஃபினை அதிகாரிகள் பத்திரமாக பிடித்து ட்ரக் மூலமாக பாஸ் டீ ஏரிபோராவிற்கு அனுப்பியுள்ளனர். பின்பு அங்கிருந்து விமானத்தின் மூலம் அந்த டால்ஃபின் பாதுகாப்பான ஆற்றில் இறக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisment

“ஒலிம்பிக்ல ஓடவிட்டா தங்கமாச்சும் கெடைக்கும்; ஐடியா இல்லாத பசங்க”- பறக்கும் மானின் வைரல் வீடியோ

நன்னீரில் மட்டுமே வாழும் இந்த டால்ஃபினை பிடிக்க கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராடி வந்துள்ளனர் இந்த குழுவினர். அப்போதே தெரிய வேண்டாமா இது ஒன்றும் அவ்வளவு எளிமையான காரியம் இல்லையென்று

Advertisment
Advertisements

பல்வேறு மனித செயல்பாடுகளின் காரணமாக விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல்வேறு விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றனர். ஒருபக்கம் உலக வெப்பமயமாதலை ஊக்குவிக்கும் மனிதர்கள். மற்றொரு பக்கமோ உலகை அழிவில் இருந்து மீட்க போராடும் மக்கள். ஒரு ஒற்றை உயிரைக் காக்க ராணுவப்படை, கப்பற்படை வீரர்கள் உட்பட பலரும் கை கோர்த்த இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த பிங்க் டால்ஃபின் ஆனது கொலாம்பியாவில் மட்டும் இல்லை. இந்த வகை நன்னீர் உயிரினமானது பொலிவியா, ப்ரேசில், ஈக்குவேடார், பெரு, வெனிசுலா போன்ற நாடுகளிலும் வாழ்ந்து வருகிறது. ஆனாலும் தற்போது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் அழியும் உயிரினமாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: