New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/06/Untitled.jpg)
Funny Video Woman Devotee stuck under Elephant statue
கடவுள் பக்தி இருக்கலாம் தான் ஆனா இது கொஞ்சம் ஓவர்-ன்னு டோஸையும் சேர்த்தே தருகின்றார்கள் நெட்டிசன்கள்...
Funny Video Woman Devotee stuck under Elephant statue
Funny Video Woman Devotee stuck under Elephant statue : பொதுவாக இந்தியர்களுக்கு கடவுள் பக்தி என்பது மிக அதிகம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. நம்முடைய எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என்று கூறி எண்ணற்ற நேத்திக்கடன்களை நாம் செய்வதும் வழக்கம் தான். ஆனால் குஜராத்தில் ஒரு பெண் ஒரு படி மேலே போய் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கோவிலுக்குள் சாமி கும்பிட சென்ற ஒரு பெண் அங்கிருக்கும் யானை கற்சிலையின் ஒரு பகுதியில் புகுந்து மற்றொரு பகுதியில் வெளிவர திட்டமிட்டார். ஆனால் விளையாட்டு விபரீதமானது தான் மிச்சம்.
அந்த சிலையின் வழியே சென்று வருவதற்கான உடல்வாகு அவரிடம் இல்லை. சிலையின் நடுவே சென்ற அவர் அப்படியே மாட்டிக் கொண்டார். வெளியே வரும் வழி தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்கும் போது கூலாக சிரித்துக் கொண்டிருந்த அவரின் ஆட்டிட்யுட் அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது.
சிறிது நேர சிரமத்திற்கு பிறகு, அவருடன் கோவிலுக்கு சென்றவர்களின் யானை சிலையின் மறுபுறத்தில் இருந்து அவரை பத்திரமாக இழுத்து வெளியே கொண்டுவந்தனர். கடவுள் பக்தி இருக்கலாம் தான் ஆனா இது கொஞ்சம் ஓவர்-ன்னு டோஸையும் சேர்த்தே தருகின்றார்கள் நெட்டிசன்கள்...
மேலும் படிக்க : கலங்க வைக்கும் செல்லப் பிராணியின் பாசம்! மனித பாசத்தை மிஞ்சிய நாயின் வீடியோ.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.