இரு சக்கர வாகனத்தில் செல்கையில் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கான்செப்ட்டே நம் உடலுக்கும், உயிருக்கும் எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான். ஆனால், நம்மாளுங்க தர்பூசணிய வழிச்சு தின்னுட்டு, அந்த கூடை தலையில மாட்டிக்கிட்டு வர்றது, ரூ.100க்கு ரெண்டு ஹெல்மெட்டு வாங்கி தலையில மாட்டிக்கிட்டு, போலீஸ்கிட்ட தப்பிச்ச மிதப்புல போயிக்கிட்டு இருப்பாங்க.
போற வழியில 'மஞ்சக் கொடி இல்லையா... மஞ்ச லாரி' மொமன்ட்டில் ஒரு லாரிக்காரன் நமக்கு நேரா வந்திட்டிருப்பான்.
வவ்வால் சாப்பிடும் சீனப்பெண்! இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா? (வைரல் வீடியோ)
இரு சக்கர வாகத்தில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என காவல் துறை சார்பில் எத்தனையோ அறிவிப்புகள் வெளியானாலும், சிலர் இதனை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.
இதனிடையே ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக, காவலர் ஒருவர் ஹெல்மெட்டின் அவசியம் குறித்து கூறுகின்றார்.
புலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ
அதில் வயிற்று பிழைப்பிற்கு தரமில்லாமல் சாலை ஓரத்தில் விற்கப்படும் ஹெல்மெட்டுகள், அளவில்லாமல் போடப்படும் ஹெல்மெட்கள், இவற்றை தவிர்க்க வேண்டும் என கூறுகின்றார்.
இந்த வீடியோ கடந்த ஆண்டும் இணையத்தில் வைரலாகி அனைவராலும் அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil "