நேற்று, கேரளாவில் அன்னாசிபழத்தற்குள் இருந்த பட்டாசு மூலம் கர்ப்பிணி யானை ஒன்று உயிரழந்த சம்பவம் அனனவரின் அதிரிச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் விலங்கினத்துக்கும் மனித இனத்துக்கும் உள்ள அடிப்படை உறவை கேள்வு கேட்கும் வகையில் அமைந்தது.
தற்போது, டெஹ்ராடூன்-மோகண்ட் சாலையில் பதிவான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில் உள்ள உள்ளடக்கங்கள் வனவிலங்கு தொடர்பான மனிதர்களின் புரிதலை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொலை: அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொடுத்தனர்
இந்திய மலைப்பாம்பு ஒன்று புள்ளி மானை விழுங்க முயற்சிக்கிறது. அப்போது, மனிதர் ஒருவர் மரக்கொப்பை பயன்படுத்தி மலைப்பாம்பிடம் இருந்து புள்ளி மானை காப்பாற்றுகிறார்.
சாவின் விளிம்பிற்கு சென்று வந்த புள்ளிமான தப்பித்தோம், பிழைத்தோம் என்று வலதுபுறம் ஊட, சொல்லமுடியாத வெட்கத்தோடு மலைப்பாம்பு இடதுபுறமாக மறைகிறது.
மூன்று வகையான விவாதங்கள் சமூக ஊடங்களில் பேசப்பட்டு வருகிறது.
- புள்ளிமானை காப்பாற்றியது சரியே. கண்ணுக்கு முன் புள்ளிமான் இறப்பதை எப்படி அனுமதிக்க முடியும். ஒரு சின்ன முயற்சி! கடைசி கட்ட கண்ணீர்! அடிப்படை கருணை என்று கூறுகின்றனர்
- புள்ளிமானை காப்பற்றியது மிகவும் தவறு. உணவுச் சங்கிலியில் தலையிட மனிதன் யார்? இயற்கையின் தன்மைகள் ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன்? கருணை ஏறு மழுப்ப வேண்டாம், இது நமது இயலாமை.புள்ளிமானின் வெற்றி மலைப்பாம்பின் துயரம் தானே? என்று தெரிவிக்கின்றனர்
- அவர் செய்தது சரியா? தவறா? என்பதை ஒற்றை வார்த்தையில் விளக்க முடியாது. எது மனிதம்? எது விலங்கினம்? என்ற அடிப்படை புரிதல் தேவைப்படுகிறது. முதலில் நமக்கு புரிதல் தேவை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிகின்றனர். நமது பொருளாதாரம், சமூக அமைப்பு, வாழ்க்கை முறை என அனைத்தையும் இந்த புரிதலின் மூலம் மருசீரமைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil