scorecardresearch

மீண்டும் ட்ரெண்டிங்கில் ‘மாலை டும் டும்’ பாடல்; ஜப்பானிய பெண்ணின் வைரல் டான்ஸ் வீடியோ

மாலை டும் டும் பாடலுக்கு ஜப்பானிய நடனக் கலைஞர் தனது தோழியுடன் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது

மீண்டும் ட்ரெண்டிங்கில் ‘மாலை டும் டும்’ பாடல்; ஜப்பானிய பெண்ணின் வைரல் டான்ஸ் வீடியோ
மாலை டும் டும் பாடலுக்கு நடனமாடும் ஜப்பானிய பெண் (படம் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டது)

தமிழ் பாடலான மாலை டும் டும் பாடலுக்கு ஜப்பானிய பெண் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில், மாலை டும் டும் பாடல் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்தது. படம் வெளியாகி சில ஆண்டுகள் ஆன நிலையிலும், மீண்டும் பாடல் வைரலாகி வருகிறது. பாடல் வெளியானபோது எப்படி, எல்லோரும் பாடலை வைத்து, ரீல்ஸ், வீடியோக்கள் வெளியிட்டார்களோ அப்படி, தற்போது மீண்டும் பலரும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: இங்கிலாந்து பெண்ணுக்கு தலை நிறைய மல்லிகைப் பூ வைத்த மதுரை பூக்காரம்மா… வைரல் வீடியோ

இந்தப் பாடல் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி படத்தில் இடம்பெற்று இருந்தது. படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக அந்தப் பாடலில் இடம்பெற்ற குறிப்பிட்ட நடனத்தை பலரும் ரீமேக் செய்து வீடியோவாக வெளியிட்டனர்.

ரோஷினியின் வரிகளில் எஸ்.தமன் இசையமைத்து அதிதி பவராஜு, யாமினி, தேஜஸ்வினி, ஸ்ரீ வர்த்தினி ஆகியோர் பாடிய ’மாலை டும் டும்’ பாடல் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வைரலான பாடலுக்கு அமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நடனத்தை அவர்கள் ஆடி வீடியோக்களாக நிறைய பேர் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்தப் பாடலுக்கு ஜப்பானிய நடனக் கலைஞர் தனது தோழியுடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மாயோ ஜப்பான் என்ற ஜப்பானியப் பெண், இந்தியப் பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்துகொள்கிறார், அந்தவகையில் அவர் மாலை டும் டும் பாடலின் நடனத்தை தற்போது பதிவேற்றியுள்ளார்.

வீடியோவில், அவர் தோழி ஜாஸ்மின் தங்கோத்ராவுடன் நடனமாடுகிறார், இருவரும் நடன அசைவுகளை சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஜாஸ்மின் தெற்கில் ட்ரெண்டிங்கில் உள்ள பாடலுக்கு மயோஜப்பானுடன் நடனம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ ஒரு நாளுக்கு முன்பு பகிரப்பட்டது. ஏற்கனவே 61,000 பார்வைகள் மற்றும் 9,400 லைக்குகள் மற்றும் நெட்டிசன்களிடமிருந்து பல நேர்மறையான கமெண்ட்களை பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Japan girl dance tamil song malai tum tum video goes viral

Best of Express