Advertisment

வைரல் வீடியோ : எத்தனை முறை தோற்றாலும் துவண்டு போகாத குட்டி கஜினி முகமது!

குழந்தைகளுக்கான பாசிட்டிவ் வைப்ரேசனாக இருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karate Kid Viral Video

Karate Kid Viral Video

Karate Kid Viral Video : எத்தனை முறை துவண்டு விழுந்தாலும், விட்டுக்கொடுக்காமல் மீண்டும் முயற்சி செய்பவர்களே வெற்றியை கொண்டாடுகிறார்கள். இந்த வீடியோவில் வரும் சுட்டி கஜினியும் இப்படித்தான்.  அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கிறது பாபி டிக்ஸனின் அமெரிக்கன் மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடெமி.

Advertisment

ஃபோனிக்ஸ் என்ற பெயர் கொண்ட இந்த குட்டிச் சிறுவன் தன்னுடைய கராத்தே ஆசிரியரிடம் கராத்தே கற்றுக் கொண்டிருக்கிறார். மாஸ்டரின் கையில் இருக்கும் டைல்ஸை உதைத்து உடைக்க வேண்டும்.

Karate Kid Viral Video

 

சில முறை முயற்சி செய்து தோல்வியை சந்திக்கவும் கண்ணீர்விட்டு அழுது கொண்டே மீண்டும் மீண்டும் முயற்சி செய்கின்றார் ஃபோனிக்ஸ்.  அவனுடைய விடாமுயற்சிக்கு அவனுடைய நண்பர்களும், பயிற்சி ஆசிரியரும் ஊக்கம் கொடுக்க, இறுதியாக டைல்ஸை உடைத்துவிட்டான். இந்த குட்டி வெற்றியை கொண்டாட, ஃபோனிக்ஸை அவருடைய நண்பர்கள் கட்டிக் கொண்டு ஆரவாரப்படுத்தினார்கள்.

குழந்தைகளுக்கான பாசிட்டிவ் வைப்ரேசனாக இருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் படிக்க : ‘மூன்றாவது அம்பயர் தூக்கு போட்டு செத்துடலாம்’! – தேம்பி தேம்பி அழும் தோனியின் குட்டி வெறியன் (வீடியோ)

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment