கொரோனா நிலைமை இன்னும் சீரடையாத போதும், பல மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மது பாட்டில்கள் கொண்டு செல்வது, கடைகள் முன்பு பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்துவது போன்று பல பணிகள் நடைபெறுகின்றன. மேலும் டெல்லி, ஆந்திரா போன்று தமிழ்நாட்டிலும் மது பாட்டில்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன.
பெற்றோர் காரைத் திருடி 5 வயது சிறுவன் செய்த செயல் - திகைத்த போலீஸ் (வீடியோ)
அதேசமயம், கொரோனா காலத்தில் மதுபானக் கடைகள் திறப்பது அவ்வளவு அத்தியாவசியமா என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. எவ்வளவு வெயில் அடித்தாலும், மழை கொட்டினாலும், இருக்குற இடத்தை விட்டு அசையமாட்டான் கோட்டை சாமி என்று குடிமகன்கள், அழகாக சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று மதுவை வாங்கிச் செல்கின்றனர்,
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு ‘குடிமகன்’ ஒருவர் வித்தியாசமான அலப்பறை கொடுத்துள்ளார்.
லாக்டவுனால நாய் கூட விரக்தி ஆவுது பாருங்க.. என்ன ஒரு சிந்தனை! (வீடியோ)
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மது அருந்தி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் குறுக்கே வந்து மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கி அடிபட்ட பாம்பை பிடித்த அந்த இளைஞர் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்துகொண்டு பொதுமக்கள் பார்த்து கொண்டிருந்த போதே கடித்து குதறினார்.
கரும்பை கடிப்பது போன்று பாம்பை கடித்து துப்பிய அவரை அங்குள்ள மக்கள் ஆச்சர்யம் கலந்த பீதியுடன் பார்த்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil