தெருவில் மீன் விற்றதால் கலாய்க்கப்பட்ட பெண் இன்று அதே கேரள மக்களுக்காக ரூ 1.50 லட்சம் நன்கொடை!

இந்த மாநில மக்கள் 500 ரூபாய் நோட்டுக்களையும் 2000 ரூபாய் நோட்டுக்களையும் வாரி வழங்கினர்.

கேரளாவில்  தெருவில் மீன் விற்றதற்காக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்ட கல்லூரி மாணவி ஹனான் ,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு 1. 50 லட்சம் நன்கொடை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவி ஹனான் :

கடந்த மாதம் கேரள மக்களின்  ஃபேஸ்புக் பக்கங்களில் பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளான  19 வயது கல்லூரி மாணவி தான் ஹனான்.   தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில்  படித்து வரும் ஹனான் காலை  கல்லூரி சென்ற  வந்த பின்னர், மாலையில் தெருவில்  மீன் விற்பார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனானுக்கு  குடிகார தந்தை,  உடல் நலம் சரியில்லாத அம்மா,  பள்ளியில் படிக்கும் தம்பி.  இவர்கள் மூவரின் செலவையும், தன்னுடைய படிப்பு செலவையும்  மீன் விற்றும் வரும் பணத்தில் தான் வழிநடத்துவர் ஹனான்.

எர்ணாகுளத்தின் ஏது ஒரு மூலையில் இருந்த ஹனான்,   ஒரே ஒரு பதிவுக்கு பின்னர் தலைப்பு செய்தியாக மாறினார்.  பிரபல கேரள பத்திரிக்கை ஒன்றில் ஹனான் குறித்த சிறப்பு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை தான்  ஹனான் வாழ்க்கையில் தீராத புகழையும்,  அழியாத காயத்தையும் ஏற்படுத்தியது.

அந்த பத்திரிக்கையில் ஹனான் வாழ்க்கை குறித்து வெளியான அனைத்து செய்திகளையும் நெட்டிசன்கள் பொய் என்று பரப்ப ஆரம்பித்தனர்.  நடிக்கிறாள், ஏமாற்றுகிறாள்,  என்ன நடிப்புடா சாமி, போதும், ஓவர் ஆக்டிங் என்று  ஏகப்பட்ட விமர்சனங்கள் ஹனான் மீது எழுந்தன.

கல்லூரி மாணவி ஹனான்

ஹனான் மீன் விற்கும் காட்சி

ஃபேஸ்புக்கில்  ஹனான் மீம்ஸ் ஒருவாரம் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதன் பின்பு கேரள முதக்வர் பினராயின் விஜயன், கேரள நடிகர் நடிகைகள் பலரும் ஹனானுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர். அவர்களை தொடர்ந்து நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கின.

பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளான அதே மீன் விற்கும் கல்லூரி மாணவி ஹானன் தான்,இன்று கேரள மக்களுக்காக 1.50 லட்சம்  கேரள வெள்ளத்திற்கு நன்கொடை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து ஹனான் கூறியிருப்பது “ நான் கஷ்டத்தில் இருந்தபோது இந்த மாநில மக்கள் 500 ரூபாய் நோட்டுக்களையும் 2000 ரூபாய் நோட்டுக்களையும் வாரி வழங்கினர். தற்போது அந்த மக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். எனவே அவர்கள் எனக்கு அளித்த நிதியுதவி முழுவதையும் சுமார் 1.5 லட்சத்தையும் அவர்களுக்கே திருப்பி அளிக்கிறேன்.

கல்லூரி மாணவி ஹனான்

மாணவி ஹனானை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் பினராயி விஜயன்

முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் உள்ள செல்போனில் இணையதள வசதி தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. வீட்டை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துகொண்டுள்ளதால் என்னால் வெளியேறவும் முடியாத நிலை உள்ளது. இந்த தொகையை பணமாகவோ அல்லது காசோலையாகவோ முதல்வரை இன்னும் இரு நாட்களில் சந்தித்து அளித்து விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

என்னை கலாய்க்காதீர்கள் கெஞ்சிய ஹனான்

ஹனானின் இந்த அறிவிப்பை பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. கேரளா பெரும் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சில முன்னணி நடிகர் நடிகைகளே நன்கொடை பற்றி இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகின்றன. ஆனால் தனது வந்த நிதியுதவியையும் வெள்ளத்க்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஹனான் தருவதாக கூறி இருப்பது பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close