ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படமான The Elephant Whisperers’ படத்தில் நடித்த யானை பராமரிப்பாளர்களான பொம்மன் – பெல்லி தம்பதியினரை விமான பயணிகள் பாராட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: ஹாயாக தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுக்கும் காட்டு யானைகள் – வீடியோ
முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கர் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியர்களுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய சென்ற பொம்மன், பெல்லி தம்பதியர்களை விமானி, விமான பணிப் பெண்கள் மற்றும் ஊழியர்கள், விமான பயணிகள் முன்னிலையில் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த செல்போன் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil