செந்தமிழ் பாடும் ஃப்ரெஞ்ச் தமிழச்சி… ஏ.ஆர். ரஹ்மானுக்கு இப்படியும் ரசிகர்களா?

மூங்கில் தோட்டம் பாடல், அது வேற ரகம் என்று தான் சொல்ல வேண்டும்.  இது வரை இந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இந்த இசை விருந்து உங்களுக்கு தான்.

By: August 6, 2020, 10:55:29 AM

L’amour de la isai : செந்தமிழ் மொழி பேசும் யாரும் நம் மக்கள் என்று தான் நாம் என்றும் கொண்டாடுவோம். பிற மொழியை தாய்மொழியாய் கொண்டவர்கள் தமிழை பேசும் போதும், தமிழின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்ளாதவர்கள் நம்மில் யாரேனும் உண்டா என்ன? பேசுவது மட்டும் என்ன? என்னால் பாடல்களும் பாட முடியும் என்று பாட துவங்கியுள்ளார் ஃப்ரெஞ்ச் பாடகி ஜேலின்.

மேலும் படிக்க : ”தினமும் அவருடன் 15 கி.மீ நடந்து தான் இந்த படத்தை எடுத்தோம்” – தபால்காரன் குறும்படம்!

ஏ.ஆர். ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் இசைகளில் வெளியான தமிழ் பாடல்களை அவரும் அவரின் நண்பரும் இணைந்து பாடும் போது, அட இந்த தமிழும் நல்லாத்தான் இருக்குது என்று நமக்கே சொல்ல தோன்றுகிறது. அத்தனை அழகு. இதுவரை நீங்கள் இந்த பாடல்களை கேட்டதில்லை என்றால் உங்களுக்காக தான் இந்த இசை விருந்து. பாடகி ஜேலின் மற்றும் நடிகர் தரண் சிவபதம் இணைந்து இந்த பாடல்களை பாடி வருகின்றனர். l’amour de la isai என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் இவர்களின் பாடல்கள் எல்லாம் செம்ம தூள் ரகம்.

ஹாரிஸ் ஜெயராஜின் உயிரின் உயிரேவும், முன் தினம் பார்த்தேனும் இவர்களால் பாடப்பட்டு நிறைய கமெண்ட்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.  மூங்கில் தோட்டம் பாடல், அது வேற ரகம் என்று தான் சொல்ல வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Lamour de la isai check the tamil songs sung by singer jaelyn and actor tharan sivapatham

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X