காட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா? சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்!

இந்த சிங்கங்களை உடனடியாக வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலுக்கிறது கோரிக்கை!

By: January 23, 2020, 10:22:22 AM

Malnourished lions spark outrage online : ஆப்பிரிக்கா என்றாலே வன விலங்குகளின் ராஜிய, தான். யானைகள், காண்டாமிருகங்கள், சிங்கங்கள் என்று ஏராளமான விலங்குகள் அங்கு இருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானின் தலைநகரான கார்டோமில் அமைந்திருக்கிறது அல் குரேஷி என்ற பூங்கா. அதில் வைக்கப்பட்டிருக்கும் சிங்கங்களுக்கு முறையான பாதுகாப்பும் உணவுகளும் வழங்கப்படாத காரணத்தால் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன.

மேலும் படிக்க : மீண்டுவருமா வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள்? மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்!

எலும்புகள் எல்லாம் தோலுக்கு மேலே துருத்திக் கொண்டிருக்கும் காட்சிகளை பார்த்தால் காட்டு ராஜாவுக்கு இப்படி ஒரு நிலமையா என்று பரிதாபம் கொள்ள வைக்கிறது அந்த சிங்கங்கள். ஒஸ்மான் சாலிஹ் என்பவர் இந்த சிங்கங்களின் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து ஆர்வமுள்ள மக்கள் இந்த சிங்கங்களை பாதுகாக்க முன்வரவும் என்று கூறியுள்ளார். மேலும் #SudanAnimalRescue என்ற ஹேஷ்டேக்கின் கீழ் சூடான் சிங்கங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வினையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த சிங்கங்களை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களுப் கருத்துகளையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த சிங்கங்கள் உடனடியாக இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : பார்க்கும் போதே பரவசம்… ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்ப்பினை தரும் வைல்ட் கர்நாடகா!

பொதுமக்கள் கருத்து

இந்த புகைப்படத்தை பார்த்த ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் பூங்கா நிர்வாகத்தினரோ, எங்களுக்கு முறையாக நிதி உதவி கிடைக்கப்பெறவில்லை. மூன்று நான்கு வாரங்களாக சிங்கங்கள் தங்களின் மொத்த எடையையும் இழக்கத் துவங்கிவிட்டன. எங்களின் சொந்த பணத்தில் தான் நாங்கள் அதற்கு முடிந்த வரை உணவினை வாங்கித் தருகின்றோம் என்று கூறியுள்ளார் பூங்கா மேலாளர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Malnourished lions spark outrage online netizens start campaign to save them

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X