அரிசி உமியில் லஞ்ச் டப்பாவும், டம்ளர்களும்; அசத்தும் “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் – வைரலாகும் வீடியோ

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை ரிட்வீட் செய்து தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்குமே இது தேவைப்படும். சுற்றுசூழலுக்கு பாதிப்பு தராத இத்தகைய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu govt introduces tableware made out of rice bran

Tamil Nadu govt introduces tableware made out of rice bran : மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படு ப்ளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் முதல்வர் இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

புலி பசித்தால் புல்லை தின்னாது… ஆனால் கார் பம்பரை சாப்பிடும் – வைரல் வீடியோ

இந்நிலையில் மஞ்சைப்பை மட்டுமின்றி, அரிசி உமியில் செய்யப்பட்ட லஞ்ச் டப்பாக்களும் இந்த திட்டத்தின் கீழ் அறிமுகமாகியுள்ளது. இந்த டப்பாக்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ.

லஞ்ச் டப்பாக்கள் மட்டுமின்றி ஒருமுறை பயன்படுத்தும் வகையில் டம்ளர்கள், ஃப்ளாஸ்க்குகள் என அனைத்தும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியிடப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே லட்சக்கணக்கானோர்கள் பார்வையிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரீஷேர் செய்துள்ள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை ரிட்வீட் செய்து தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்குமே இது தேவைப்படும். சுற்றுசூழலுக்கு பாதிப்பு தராத இத்தகைய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Meendum manjappai program tamil nadu govt introduces tablewares made out of rice bran

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com