கின்னஸ் சாதனைகள் பலவிதம்… ஆனால் இது வேற ரேஞ்ச்… ஒரு மோதிரத்தில் அதிகபட்சமாக எத்தனை வைர கற்கள் வைக்க முடியும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? தோராயமாக 12,638 வைரங்களை பதித்த ஒரு மோதிரம் என்றால் அதனை வியப்பீர்கள் தானே? அப்படியான ஒரு மோதிரம் தான் தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
மீரட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று இந்த மோதிரத்தை 28 நபர்கள் அடங்கிய குழுவுடன் உருவாக்கியுள்ளனர். இந்த மோதிரம் பார்க்க ஒரு செவ்வந்தி பூ போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன என்று கேட்ட போது அவர்கள் “இந்து நம்பிக்கைகளில் செவ்வந்தி பூ அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது என்பதாகும்.அதனால் இந்த வடிவில் உருவாக்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார் அனில் பன்சால்.
மேலும் படிக்க : கல்யாணத்துக்கு ட்ராக்டரில் வந்த மணமகன்… வைரலாகும் புகைப்படம்!
165.450 கிராம் எடை கொண்ட இந்த மோதிரத்தில் 38.08 கேரட் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. International gemological laboratory (IGI)-ல் சான்றழிக்கப்பட்ட இந்த மோதிரம் தற்போது கின்னஸில் இடம் பெற்றுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”