New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/04/lol-horz.jpg)
MP Ravindranath Kumar, O Panneerselvam checked the quality of food from Amma Unavagam Theni
MP Ravindranath Kumar, O Panneerselvam checked the quality of food from Amma Unavagam Theni
MP Ravindranath Kumar, O Panneerselvam checked the quality of food from Amma Unavagam Theni : தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது அம்மா உணவகம். கொரோனா ஊரடங்கு உத்தரவு முடியும் வரையில் அம்மா உணவகத்தில் ஆதரவற்றவர்கள் முதல் தேவையானவர்களுக்கு தொடர்ந்து உணவினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை, இவ்வுணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் சிறப்பான முறையில் தரமாக தயாரிக்கப்பட்டு வருகிறதா என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்றது. இந்த பணியில் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார் மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் ஈடுபட்டனர். நேரில் சென்ற அவர்கள், ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் உணவை உண்டு தர ஆய்வில் ஈடுபட்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க : லாக்டவுன்ல பொறந்த குழந்தைக்கு கொரோனான்னா பேர் வைப்பது?
தமிழகம் முழுவதும் தரமான உணவுகள், அம்மா உணவகத்தின் வாயிலாக மக்களுக்கு அளிக்கப்படுகிறதா என்ற ஆய்வு இன்று அதிமுக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கனிமொழி எம்.பி. நேற்று தன்னுடைய தொகுதியான தூத்துகுடிக்கு சென்ற அவர் கொரோனா வார்டினை மேற்பார்வை செய்தார். தமிழக எம்.பி.க்களின் துரித பணிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.