கொரோனா தொற்றை கொஞ்சம் “சீரியஸ்ஸா” எடுத்துக்கங்க - கெஞ்சும் மருத்துவர் - வீடியோ

கொரோனாவில் இருந்து தப்பித்ததால் நீங்கள் சூப்பர் ஹீரோ என்று நினைக்க வேண்டாம். முகக்கவசம் அணியுங்கள் என்று வேண்டுகோள்

கொரோனாவில் இருந்து தப்பித்ததால் நீங்கள் சூப்பர் ஹீரோ என்று நினைக்க வேண்டாம். முகக்கவசம் அணியுங்கள் என்று வேண்டுகோள்

author-image
WebDesk
New Update
mumbai doctor emotional viral video, doctor covid appeal, dr Trupti Giladi, mumbai doctor helpless video, viral videos, indian express

Mumbai doctor’s emotional appeal to public to take COVID-19 seriously : கொரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் மும்பை மருத்துவர் ஒருவர் மக்களுக்கு கோரிக்கை ஒன்று வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா பரவல் எதிரொலி; தயாரிப்பை நிறுத்தும் ஹீரோ!

தொற்றுநோய் தடுப்பு சிறப்பு நிபுணரான மும்பையை சேர்ந்த மருத்துவர் திருப்தி கிலாடி, சுகாதாரத்துறை ஊழியர்கள் எவ்வாறு நம்பிக்கையற்று தினமும் தொற்றுநோயை எதிர்த்து போராடி வருகின்றனர் என்று 5 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கண்ணீருடன், “நாங்களும் நம்பிக்கையின்றி இருக்கின்றோம். மற்ற மருத்துவர்களைப் போன்று தானும் பாதிக்கப்பட்டிருக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

அனைத்து நோயாளிகளையும் நாம் சமாளித்து ஆக வேண்டும். மிகவும் மோசமான சூழலில் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் தங்களின் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏன் என்றால் இங்கு படுக்கை வசதிகள் இல்லை. நாங்கள் இதனை ரசிக்கவில்லை. நீங்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிட்டால் நீங்கள் சூப்பர் ஹீரோ என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் என்றும் கூறினார் கிலாடி.

நீங்கள் எங்கே வெளியே சென்றாலும் நிச்சயமாக முகக்கவசங்கள் அணிந்து வெளியே செல்ல வேண்டும். நீங்கள் ஏன் வெளியே செல்கிறீர்கள் என்பது முக்கியமே அல்ல. ஆனால் கட்டயமாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: