மைதானத்தில் விழுந்து, விழுந்து 14 நிமிடத்தை வீணாக்கிய நெய்மர்! விடாமல் துரத்தும் சர்ச்சைகள்!

”உலக மகா நடிகன்டா இந்த நெய்மர்”

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்தில் ஓட்டு மொத்த ரசிகர்களும் ஒன்றாக திரண்டு ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால் அது பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் அழுததை பற்றி தான். நட்சத்திர வீரான நெய்மர் இந்த உலகக்கோப்பையில் கடுமமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தின் போது 71-வது நிமிடத்தில் மைதானத்தில் நெய்மர் வலியால் துடித்தது இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எவருமே நினைத்து இருக்க மாட்டார்கள். ஏன் நெய்மரே நினைத்து இருக்க மாட்டார். மெக்சிகோ வீரர் மிகுயெல் லயுன், தேவையில்லாமல் நெய்மரின் ஆபரேஷன் நடந்த கணுக்கால் மீது தன் ஷூவால் மிதிக்க, நெய்மர் வலியால் துடிக்க, இந்த சம்பவத்தை தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்ப கடைசியில் நெய்மருக்கு கிடைத்த பெயர். ”உலக மகா நடிகன்டா இந்த நெய்மர்” என்பது தான்.

”எதிரணி வீரர்கள் யாராவது உரசினாலே அப்படியே 5 ரவுண்டு பல்டி அடிப்பார் நெய்மார்.. இப்படி காலை மிதித்து விட்டால் என்ன நடக்கும் இதுதான் நடக்கும் “ என்று முன்னணி கால்பந்து வீரர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் நெய்மரை விமர்சித்து வருகின்றன. அந்த நிமிடம் உண்மையிலியே நெய்மர் வலி பொறுக்காமல் அழுதாரா? இல்லை உலகம் பேசுவது போல் அழுவது போல் நடித்தாரா? என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

சிவாஜி கணேசனை மிஞ்சினாரா நெய்மர்

இந்த சம்பவம் பற்றி பேசிய மெக்சிகோ பயிற்சியாளர் ஜூவான் கார்லஸ் ஒசோரிய, எதிரணி வீரர்கள் லேசாக உரசியவுடன் கீழே விழுந்து வலியால் துடிப்பது போல் நடிப்பதே நெய்மரின் வேலை என்று கடுமையாக கருத்து கூறியுள்ளார். அதே போல் நெய்மரின் செயலால் கடைசி கட்டத்தில் நேரம் வீணாகி எங்கள் வீரர்கள் சோர்வடைந்து விட்டனர் என்றும் ஜூவான் கூறியுள்ளார். இந்நிலையில் தான் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டி.வி. நிறுவனம் ஒன்று விநோத ஆய்வு ஒன்றை நடத்தியது.

நெய்மர் விளையாடிய 4 ஆட்டத் தொடர்ந்து கண்காணித்து நெய்மர் அடிக்கடி கீழே விழுந்து வலியால் துடித்ததில் அவர் 14 நிமிட நேரத்தை வீணடித்து உள்ளதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதனை முற்றிலும் மறுத்துள்ள நெய்மர், “என் மீது எழும் அவர் கூறுகையில், விமர்சனத்தையோ, பாராட்டுகளையோ நான் கண்டு கொள்வதில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய நெய்மர், “ நான் நடிக்கிறேனா? அவர்கள்தான் நடிக்கிறார்களோ?. என் சகாக்களுடன் வெற்றிபெறவே இங்கு வந்துள்ளேன்” என பதிலடி கொடுத்துள்ளார். தொட்டால் சிணுங்கி என்று சக வீரர்களால் நெய்மர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

×Close
×Close