கடலா புயலா இடியா மழையா… என்னை ஒன்றும் செய்யாதடி – இப்படிக்கு மீம் க்ரியேட்டர்கள்

இதை படித்து விட்டு, நிவர் காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த மீம் எது என்று எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Nivar cyclone 2020 funny memes

Nivar cyclone 2020 funny memes : என்னதான் நிலைமை மோசமான போனாலும் மீம் கிரேயட்டர்கள் இல்லாமல் வாழ்க்கை ஓடாது என்பது தான் நிதர்சனமான உண்மை. அட வெளில மழை வெளுத்து வாங்குது, ஆனாலும் இவங்கள ஒன்னும் செஞ்சுக்க முடியலன்னு தான் தோணுது. நிவர் புயல் வருவதற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் துவங்கி கொரோனா வரை அனைத்தையும் “வச்சு செஞ்ச” அவங்களுக்கு தற்போது வசமாக மாட்டிக் கொண்ட ஒரு பலி கெடா தான் இந்த நிவர் என்பதைப் போல் உள்ளது.

திகிலைக் கிளப்பும் தலைப்பு செய்திகளும், முக்கிய செய்திகளும் படித்து பெரும் மூச்சுவிடும் நபர்களுக்கு இளைப்பாற இந்த மீம்கள் உதவும் என்று நினைக்கின்றோம். இதை படித்து விட்டு, நிவர் காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த மீம் எது என்று எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

எல்லாருக்கும் இதுல என்ன கவலைன்னா, கொரோனாவையே தூக்கி சாப்ட்றுச்சு இந்த நிவர் புயல் என்பதில் தான்…

வருசம் வருசம் வரும் புயல் தான்… ஆனா இந்த புயலுக்கான சேதாரத்தையும் என் தலைல கட்டிடாதீங்கன்னு செல்லமா சண்டை  போடுதாம் 2020 வருசம். ஆனாலும் இந்த வருசம் எல்லாருக்கும் நெறைய செஞ்சுருக்கு போல…

 

அட யாரெல்லாம் இந்த 2021 வருசத்துக்கு ஆவலா காத்துக்கிட்டு இருக்கிங்கன்னு ஒரு வார்த்தை சொன்னா, அடுத்த வருசத்துக்கான பக்கெட் லிஸ்ட்டை காலம் ரெடி பண்ண ஆரம்பிச்சுரும்னு பட்சி சொல்லுதுப்பா… பட்சி!

இந்த கொரோனா காலத்தில் அம்மாக்கள் தான் பாஸ் ரொம்ப பாவம்… கொஞ்சம் மனசு வைங்க… உங்களுக்கு வேணும்னா நீங்க சமைச்சு அம்மாவுக்கு தரலாம். அட அப்பவும் அம்மா தான் பாஸ் ரொம்ப பாவம்…

ஏதாவது சொல்றதுக்கு இருக்குதா என்ன? “இஸ்கூல் பசங்களுக்கு எல்லாம் வாழ்க்கை தான்”… இருந்தாலும் யாரெல்லாம் ஆன்லைன் க்ளாஸஸ் அட்டெண்ட் பண்ணிட்டு இருக்கிங்க இப்போ?

 

இப்போதைக்கு அவ்ளோ தான் பாஸ்… வேற எதுனா இருந்தா கமெண்ட் பண்ணுங்க.. மழை காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும். அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கி இந்த நிவர் புயலையும் எதிர் கொள்வோம்.

நிவர் குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nivar cyclone 2020 funny memes

Next Story
சிசிடிவி கேமராக்களில் பதிவான கொடூரமான விபத்துகள்! உயிர்காக்க சாலை விதிகளை மதிப்பீர்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com