/tamil-ie/media/media_files/uploads/2022/10/OI-pots-snake.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் விதவிதமான சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்கு, பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்றதுமே நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/OI-pots-snake-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதிதாக செய்யப்பட்ட பச்சைப் பானைகள் காய வைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பானையில் பாம்பு மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் பார்ப்பதற்குத்தான் ஒரு தந்திரமாகத் தெரியும், ஒரு கண்கட்டி வித்தை என்று நினைக்கலாம், அது மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம் என்று நினைக்கலாம், ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால் அது ஒன்னுமே இல்லை. மிகவும் எளிதானப் புதிர்தான்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/OI-pots-snake-2.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. பானை வனையும் குயவர் பானைகளை செய்த பிறகு அவற்றை எடுத்து லேசாக காய வைத்து ஈரத்தில் பானைகளின் அடிப்பகுதியைத் தட்டி மூடி பானையை முழுமையாகச் செய்து காய வைப்பார்கள். பிறகு, அந்த பானைகளை சூலையில் இட்டு வேகவைத்தால் பானை ரெடி.
அப்படி ஒரு குயவர் பானைகளை வனைத்து அடிப்பகுதியை மூடி காய வைக்கும்போது அந்த பச்சைப் பானைகளில் ஒரு பானையில் எப்படியோ ஒரு பாம்பு வந்து அடைக்கலமாகி இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இருந்து என்பது தெரிகிறது. ஆனால், மேலோட்டமாகப் பார்த்தால் எந்த பானையில் பாம்பு இருக்கிறது என்று தெரியவில்லை. அதனால், இந்த படத்தில் எந்த பானையில் பாம்பு இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் எந்த பானையில் எங்கே பாம்பு மறைண்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/OI-pots-snake-2-1.jpg)
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேல் பகுதியில் பாருங்கள். மீண்டும் ஒருமுறை படத்தை உற்றுப் பார்த்து தேடுங்கள்.
இப்போது அந்த பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/OI-pots-snake-answer.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது.
Read More →/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us