New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/a3-3.jpg)
செல்லப் பிராணி Chihuahua-விற்கு சோஷியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
மதிய உணவுக்குப் பிறகு மெதுவாக எனது கையை நகர்த்த முடியவில்லை என்பதை உணர்ந்தேன்
செல்லப் பிராணி Chihuahua-விற்கு சோஷியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் மற்றும் செல்லப்பிராணி என்பதை Chihuahua அதன் உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றி மீண்டும் நிரூபித்துள்ளது.
வட கரோலினாவில் ஓரியண்டலில் மிதக்கும் வீட்டில் வசிக்கும், 86 வயதான கடற்படை வீரரான ரூடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு சமீபத்தில் பக்கவாதம் ஏற்பட்டது. தனது நாயுடன் தனியாக வாழ்ந்த ஆம்ஸ்ட்ராங், உதவிக்கு தனது நண்பரை தொலைபேசி மூலம் அழைத்த போது, சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறினார்.
இதை கவனித்த நாய், அருகில் வசிக்கும் அந்த ரூடியின் நண்பரான கிம்-மை அழைத்து வந்திருக்கிறது. அதன் பின் கிம் 911 ஐ அழைத்தார். ஆம்ஸ்ட்ராங், துணை மருத்துவர்களின் உதவியுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து உள்ளூர் WCTI டிவியில் பேசிய ஆர்ம்ஸ்ட்ராங், "அந்த நாள் மிகவும் சாதாரணமாகத் தொடங்கியது, ஆனால் மதிய உணவுக்குப் பிறகு மெதுவாக எனது கையை நகர்த்த முடியவில்லை என்பதை உணர்ந்தேன்" என்றார்.
ஆம்ஸ்ட்ராங் CarolinaEast மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை கவனித்து வருகின்றனர்.
வறுத்த கறி திண்ணுறியா? வளர்ப்பவரின் கேள்விக்கு பூனையின் ஷாக் ரியாக்சன்! – வீடியோ
ஆம்ஸ்ட்ராங் WNCT9 செய்தியிடம் "நான் அவளை (Chihuahua) பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதாவது, அவள் என்னுடன் தூங்குகிறாள், நான் காரில் எங்காவது செல்லும்போது அவள் என்னுடன் வருகிறாள், நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும்" என்றார்.
இருவரும் மீண்டும் இணைந்ததைக் காட்டும் புகைப்படங்களை சுகாதார மையம் பகிர்ந்து கொண்டது. நாய் அதன் எஜமானரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டது.
"அவர் எங்கள் மறுவாழ்வு மருத்துவமனையில் நன்றாக குணமடைந்து வருகிறார்" என்று மருத்துவமனை பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அவசர காலத்தில் தனது எஜமானரின் உயிரைக் காப்பாற்றிய செல்லப் பிராணி Chihuahua-விற்கு சோஷியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.