Praise pours in for 11-year-old girl after she rescues shark caught between rocks : ஆஸ்திரேலியாவின் டஸ்மானியா பகுதியில் அமைந்திருக்கும் ட்ரௌவுட்போர்ட் சுறா மீனை காப்பாற்றியுள்ளார் பில்லி ரே என்ற சிறுமி. அலையால் அடித்து வரப்பட்டு பாறைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்ட மீனை லாவகமாக பிடித்து, நழுவி விடாமல் கையில் வைத்து சிறிது தூரம் நடந்து சென்று கடலுக்குள் விடுகிறார் ரே.
A 11-year-old girl rescues a trapped draughtboard shark and guides it to sea in Tasmania pic.twitter.com/MY5c3aq0nV
— Reuters (@Reuters) November 24, 2020
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பில்லியை புகழ்ந்தது மட்டுமில்லாமல் இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளனர். 11 வயது சிறுமியான பில்லி, ஒரு குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்வது போல், இட்ஸ் ஆல்ரைட் , ஆல்ரைட் என்றவாறே அந்த குட்டி சுறா மீனை எடுத்து செல்கிறார்.
மேலும் பார்க்க :”முடிய வெட்டாதீங்க…” இந்த குட்டி உருவத்துக்குள் இவ்வளவு கோபமா?
நேற்று இரவு வெளியான இந்த வீடியோவை கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோவை பற்றியும் இந்த குழந்தையின் உதவும் குணம் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை கமெண்ட்டில் பதிவிடுங்கள் .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil