Advertisment

கட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி... மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்

மக்களவையில் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி. சமூக வலைத்தளத்தில் உலக அளவில் முதல் இடம் பிடித்தார் ராகுல் காந்தி. குஷியில் மீம்ஸ் கிரியேட்டர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி... மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்

பிரதமர் மோடியின் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று மக்களவையில் அரங்கேறியது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எதிராகப் பேசினார்.

Advertisment

அப்போது மோடியின் ஆட்சியின் மீது ஏன் நம்பிக்கை இல்லை என்று காரணங்களை சுட்டிக்காட்டினார். இறுதியாகத் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி, தனது இடத்தில் இருந்து நடந்து சென்று மோடியைக் கட்டி அணைத்தார். ராகுல் காந்தி வேகமாக வருவதைப் பார்த்து ஒரு வினாடி மோடி பதற்றம் அடைந்திருந்தாலும், கட்டிப்பிடி வைத்தியத்திற்குப் பிறகு ராகுல் காந்தியை அழைத்து கைக் குலுக்கினார்.

வீடியோ: மக்களவையில் பிரதமர் மோடியை கட்டியணைத்த ராகுல் காந்தி

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களவையில் கட்டிப்பிடிப்பது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகும். இத்தகைய நிகழ்வுக்குப் பிறகு, இணையத்தளம் முழுவதும் புகைப்படங்கள், வீடியோ மற்றும் மீம்ஸ்களால் ஸ்தம்பித்தது. மேலும் இந்த நிகழ்வு நடந்த சில நேரத்திலேயே ராகுல் காந்தி உலக அளவில் டுவிட்டரில் டிரெண்டானார்.

டுவிட்டரில் முதலில் மோடியை ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததே டிரெண்டானது. மோடியைக் கட்டிப்பிடிப்பதற்கு முன், “நீங்கள் என்னை பப்பு என்று கூப்பிடுங்கள். அதற்காக நான் உங்களை வெறுக்கப்போவது இல்லை” என்று கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு இது தான் இந்த நாள் முழுவதும் பேசப்படும் என்று நினைத்தால் அதையெல்லாம் தூக்கி அடித்தது ராகுல் காந்தி கண்ணடித்த வீடியோ. மோடியை அணைத்த பின்னர் தனது இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி, பக்கத்தில் இருப்பவரை பார்த்து “இது எப்படி இருக்கு?” என்பது போல் கண்ணடித்தார். கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? வாரியரை மிஞ்சும் அளவிற்கு உள்ளது ராகுல் காந்தி கண்ணடிக்கும் வீடியோ.

பரபரப்பாக பேசப்பட வேண்டிய விவாதம், ராகுல் காந்தியின் செயலுக்கு பிறகு மீம்ஸ் போடும் டெம்பிளேட்டாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்தை மீம்ஸ் போட்டி கலாய்த்து வருகின்றனர்.

இதில் சிலர், “அப்பா கோவா போக அனுமதி அளித்தால் இப்படி தான் கட்டிப்பிடிப்போம்” என்றுள்ளனர்.

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment