New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/06/sachin-60.jpg)
shocking video
பாம்பு எடுக்கப்பட்டது கூட அவருக்கு தெரியாது என்பது கூடுதல் ஹைலைட்.
shocking video
shocking video: குர்தாவில் பாம்பு சென்றதுக் கூட தெரியாமல் நோயாளி ஒருவர் துங்கிய வீடியோ பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லை அவரின் உடம்பில் இருந்து பாம்பு எடுக்கப்பட்டது கூட அவருக்கு தெரியாது என்பது கூடுதல் ஹைலைட்.
மகாராஷ்ட்ரா மாநிலம் அகமத் நகர் பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனை ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் அதே பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக அவருக்கு தீவிர காய்ச்சல் இருந்ததால் அவர் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது தான் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற நீண்ட குர்தாவில் 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று உள்ளே புகுந்து தஞ்சம் அடைந்துள்ளது. ஆனால் தனது உடலுக்குள் பாம்பு நுழைந்தது கூட தெரியாமல் அந்த நபர் அப்படியே தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த மற்றவர்கள் சிலர் அவரின் குர்தாவுக்குள் பாம்பு இருப்பதை கவனித்துள்ளனர். அவரை எழுப்பினால் அவர் பயந்து விடுவார் என நினைத்த அவர்கள் புத்திசாலி தனமாக உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவமனைக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பாம்பை பிடித்தனர்.
ஆனால் அவர்கள் வந்து தனது குர்தாவுக்குள் இருக்கும் பாம்பை பிடித்தது கூட தெரியாமல் தொடர்ந்து அந்த நோயாளி தூக்கத்திலேயே இருந்தார். இதைப்பார்த்து அந்த தீயணைப்பு வீரரும் சிரித்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரையும் பயமுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.