வயிற்றில் 10,000 தேனீக்களை மொய்க்க விட்ட கர்ப்பிணி – இப்படியொரு போட்டோஷூட் தேவையா?

Tamil Viral News: சமூக தளங்களில் பரம்பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத லைக்குக்காகவும், கமெண்ட்டுகளுக்காகவும் ஏதேதோ குரங்கு வித்தைகளையெல்லாம் இணையவாசிகள் செய்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு வித்தை தான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி – கண்களுக்கு சவால்…

By: July 5, 2020, 9:02:03 PM

Tamil Viral News: சமூக தளங்களில் பரம்பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத லைக்குக்காகவும், கமெண்ட்டுகளுக்காகவும் ஏதேதோ குரங்கு வித்தைகளையெல்லாம் இணையவாசிகள் செய்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படி ஒரு வித்தை தான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது.

பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி – கண்களுக்கு சவால் தரும் இமேஜ்

டெக்சாஸில் கர்ப்பிணிப் பெண் ஒருவர், maternity photoshoot-காக எடுத்த புகைப்படம் தான் பேசுபொருளாகி இருக்கிறது. அவரது கர்ப்ப வயிற்றில் ஆயிரக்கணக்கான தேனீக்களை மொய்க்கச் செய்து போட்டோ எடுத்திருக்கிறார். காண்போரை ஒரு நொடி அதிரச் செய்யும் இப்புகைப்படத்தை அவரே தனது சோஷியல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தேனீக்களை வைத்து வியாபாரம் செய்து வரும் Bethany Karulak-Baker எனும் பெண் தான் இந்த கர்ப்பிணி.


இதுகுறித்து அவர் கூறுகையில், “இது மிகவும் ஆபத்தானது. தயவுசெய்து அனுபவமும் அறிவும் இல்லாமல் இதை முயற்சி செய்ய வேண்டாம். நான் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்த எனது மகப்பேறு புகைப்படங்கள் இங்கே. கவலைப்பட வேண்டாம். எனது மருத்துவரின் அனுமதி பெற்றே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. தோராயமாக 10 ஆயிரம் தேனீக்களை பயன்படுத்தினோம்” என்று சர்வ சாதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamil viral news latest viral news tamil viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X