வீடியோ காலில் பிரேசில் அதிபருக்கு வந்த சோதனை - கேமராவை ஆஃப் செய்யாமல் குளித்த தொழிலதிபர்

Tamil Viral News: ஒரு மனிதனுக்கு எப்படி வேண்டுமானாலும் சோதனை வரலாம். ஆனால், இப்படி ஒரு சோதனை வரக் கூடாது. அந்த சோதனை பிரேசில் அதிபருக்கா இல்லை அந்த தொழில் அதிபருக்கா என்பதே கேள்வி.

பிரேசிலில் ஊரடங்கு குறித்து அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உட்பட முக்கிய அதிகாரிகள் வீடியோ காலில் ஆலோசனை நடத்தி உள்ளனர். தொழில் அதிபர்களும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

சிறுத்தைக்கு சவால் விட்ட முள்ளம் பன்றி: வைரல் வீடியோ

சாவோ பாலோ மாநிலத்தின் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவரான பாலோ ஸ்காஃப், பிரேசிலில் ஊரடங்கு தாக்கம் குறித்து விவாதிக்க அதிபர் போல்சொனாரோ மற்றும் பிற முக்கிய நபர்களுடன் அழைப்பு விடுத்தார்.

அப்போது ஒரு நபர் தற்செயலாக நிர்வணமாக குளிக்கும் வீடியோ திரையில் தெரிந்துள்ளது.

இயற்கையின் அதிசயம்! இரட்டை தலை ஆமை கண்டெடுப்பு – வியக்கும் ஆய்வாளர்கள் (வீடியோ)

இதனை கவனித்து குறுக்கிட்ட அதிபர், கடைசி பாக்ஸில் இருக்கும் உங்களது சகஊழியர் சரியாக இருக்கிறரா என்று பாலோவிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது பாலோ அவரை கவனித்துள்ளார். அதில் அவர் நிர்வணமாக குளிக்கும் வீடியோ திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அவர் ஆலோசனை முடிந்தது என்று நினைத்து கேமிராவை ஆஃப் செய்யாமல் இருந்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.


தவறுதலாக நடைபெற்ற இந்த சம்பவத்தின் ஸ்கீரின்ஷாட் அவரின் பெயர் குறிப்பிடமால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close