New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/viral-video.jpg)
யானை வந்து தன்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்தும் போது இறந்தவரின் உறவினர் வந்து யானையின் தந்தத்தை பிடித்து அதற்கு ஆறுதல் சொல்கிறார்.
Tamil Viral news Trending video of elephant paying last respect to his Mahout : யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு என்றுமே நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்றாகவே இருக்கிறது. சமீபத்தில் தன்னுடைய பாகன் இறந்த நிலையில், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக யானை அழைத்து வரப்படும் காட்சிகளும், அது இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க : சுவையான, ருசியான சிள்வண்டுக்கறி ரெசிபி; சமூக வலைதளங்களை தெறிக்கவிட்ட அமெரிக்கர்கள்
Touching. Elephant paying last respect to his Mahout. WA forward. pic.twitter.com/lZjBRyEdpO
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 4, 2021
கேரள மாநிலத்தில் பாகன் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அவருடைய உறவினர்கள் அனைவரும் அங்கே அழும் காட்சிகளும், யானை வந்து தன்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்தும் போது அங்கிருக்கும் பெண்கள் பலமாக அழும் காட்சிகளும் மனதை உலுக்குகிறது. யானை வந்து தன்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்தும் போது இறந்தவரின் உறவினர் வந்து யானையின் தந்தத்தை பிடித்து அதற்கு ஆறுதல் சொல்கிறார்.
மேலும் படிக்க : கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கங்கப்பா! புலியின் வழியை மறைத்து வீடியோ எடுத்த இளைஞர்கள்
ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த பாசப்பிணைப்பு குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.