மயிலின் நடனத்தை ஸ்லோ-மோவில் பார்த்திருக்கிறீர்களா? மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ

இன்று காலை பதிவேற்றியிருக்கும் இந்த 23 நொடி வீடியோவை இதுவரை 56.8 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.

Tamil Viral news Trending video of peacock dance in Slow Mo

Tamil Viral news Trending video of peacock dance in Slow-Mo: பருவ காலங்களில் தன்னுடைய இணையை கவர்வதற்காக ஆண் மயில்கள் தன்னுடைய அழகான இறகுகளை விரித்து நடனமாடும். மழைவரும் காலங்களில் தோகையை விரித்து மயில் ஆடும் அழகான காட்சிகளை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனாலும் இந்த ஸ்லோ-மோ வீடியோ வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க : நிறம் மாறும் பனிப்பூனைகள்; யூராசியன் லின்க்ஸின் வைரல் வீடியோ

வனத்துறை அதிகாரி சுதா ராமன் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில் ஆண் மயில் ஒன்று தன்னுடைய இறகுகளை தரையில் இருந்து தூக்கு, விரித்து, அழகாக நாடனமாடும் காட்சிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

மேலும் படிக்க : உலகிலேயே விலை உயர்ந்த மீன் இது தான்… ரூ. 72 லட்சத்திற்கு ஏலம் போன க்ரோக்கர்

இன்று காலை அவர் பதிவேற்றியிருக்கும் இந்த 23 நொடி வீடியோவை இதுவரை 56.8 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். பலரும் இந்த வீடியோவிற்கு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது உண்மை தானா என்று கேள்வி எழுப்பிய பலரும், இது போன்று ஸ்லோமோஷனில் மயில் நடனத்தை பார்த்ததில்லை என்றும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு நீங்கள் கீழே கமெண்ட் செய்யவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil viral news trending video of peacock dance in slow mo

Next Story
பறந்து பறந்து நீச்சல்; சுற்றுலாப் பயணிகளை துரத்தி வந்த நீர் யானை – வைரல் வீடியோhippo chases tourists, hippo chase tourists in water,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express