பச்சோந்தி மட்டும் அல்ல, காட்டுப் பூனைகளும் நிறம் மாறும் – பிரமிக்க வைக்கும் வைரல் வீடியோ

துல்லியமாக கேட்கும் திறன் மற்றும் பார்வைத் திறன் கொண்ட இரவாடி வேட்டைக் கார விலங்குகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. 250 அடிக்கு அந்த பக்கம் இருக்கும் சிறிய விலங்கின் அசைவைக் கூட மிகவும் துல்லியமாக கணிக்க கூடிய விலங்கு இது

Trending viral video of camouflaged Eurasian lynx, trending video,

Trending viral video of camouflaged Eurasian lynx : விலங்குகளும் பறவைகளும் இயற்கையும் என்றுமே ஆச்சரியம் தரக்கூடியவை தான். ஒவ்வொரு விலங்குகளை குறித்தும் தனித்தனியாக அறிந்து கொள்ள ஆயுள் பத்தாது. ஒவ்வொரு விலங்கின் தகவமைப்பும் அதன் சூழலுக்கு ஏற்றவாறே வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரத்திற்கு ஏற்றது போல் மாறிக் கொள்வது கடுமையான காலங்களில் உயிர்த்திருக்க உதவும் என்பது இயற்கையின் விதி. பச்சோந்திகள் மட்டும் இடத்திற்கு தகுந்தாற் போல் தங்களை மாற்றிக் கொள்வதில்லை. நிறைய விலங்குகளும், பறவைகளும் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும்.

மேலும் படிக்க : மீன் பறவைகளை வேட்டையாடுமா? வைரலாகும் வீடியோ

வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய ஆசியா மற்றும் சைபீரிய நாடுகளில் வாழும் விலங்கு தான் யூராசியன் லின்க்ஸ். மத்திய அளவுடைய காட்டுப் பூனை இது. 5500 மீட்டர் உயரம் உள்ள பனிக்காடுகளில் மட்டுமே வாழும் இந்த வகைப் பூனைகள் காலத்திற்கு ஏற்றவாறு தங்களின் உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளும்.

புலிகள் போன்றே தோற்றம் அளிக்கும் இந்த வகை பூனைகள் கோடை காலங்களில் செம்பழுப்பு நிற புள்ளிகள் கொண்டு பழுப்பு நிறங்களில் காணப்படும். ஆனால் குளிர்காலங்களில் பழுப்பு நிறத்திற்கு பதிலாக தோல் முழுவதும் வெள்ளை நிறமாக மாறிவிடும். பனிப் பொழிவு அதிகம் மிக்க பகுதிகளில் நடப்பதற்கு ஏதுவாக அதன் கால்களும் மாறிவிடும்.

மேலும் படிக்க : இந்தாம்மா கிளி… பாடுறது தான் பாடுற, ஒரு நல்ல தமிழ் பாட்டா பாடு!

துல்லியமாக கேட்கும் திறன் மற்றும் பார்வைத் திறன் கொண்ட இரவாடி வேட்டைக் கார விலங்குகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. 250 அடிக்கு அந்த பக்கம் இருக்கும் சிறிய விலங்கின் அசைவைக் கூட மிகவும் துல்லியமாக கணிக்க கூடிய விலங்கு இது. வனவியல் வீடியோக் கலைஞர் ரஷ்ஷல் மெக்லாக்லின் எடுத்துள்ள இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of camouflaged eurasian lynx walking on the snow

Next Story
இந்தாம்மா கிளி… பாடுறது தான் பாடுற, ஒரு நல்ல தமிழ் பாட்டா பாடு!Trending viral video of parrot singing rock classics, viral videos, viral, trending viral videos
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com