சஃபாரி ரைடில் கார் கதவை திறந்த சிங்கம் - சப்த நாடியும் ஒடுங்க அலறிய குடும்பம் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil viral video social media viral latest viral

tamil viral video social media viral latest viral

Tamil Viral Video: காடுகளை சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள் காரில் சஃபாரி ரைடு செல்வதை பார்த்திருப்போம். த்ரில் பயணம் விரும்புபவர்கள் தான் இப்படிச் செல்வார்கள். சிங்கம், புலி போன்ற விலங்குகளை மிக அருகில் இருந்து அவர்களால் காண முடியும். அந்த த்ரில்லிங் தான் அவர்களது போதையே.

Advertisment

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நாம் மறந்துவிடலாமா?

பாட்டுப்பாடி வாயில்லாத ஜீவன்களை “காண்டாக்காதீங்க”! அப்பறம் இப்படித்தான் ஆகும் (வீடியோ)

அப்படியொரு சம்பவம் ஒன்றை சமூக தள ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

காடு ஒன்றில் பெண் சிங்கங்கள் மர நிழலில் அமைதியாய் அமர்ந்திருக்க, ஒரு குடும்பம் அவ்வழியே சஃபாரி ரைடு செல்கிறது. சிங்கங்கள் அருகே சென்றது கார் நிறுத்தப்பட அனைவரும் அவற்றை ரசிக்கின்றனர்.

அப்போது ஒரு பெண் சிங்கம் ஒன்று, பொறுமையாக எழுந்து வந்து கார் அருகே நின்று கொண்டு, 'இங்கே வராதே... போ' என்ற மோடில் பார்க்க, கார் இரண்டு அடி நகர்ந்து மீண்டும் நின்றது.

எந்த தந்தையும் செய்யத் துணியாத செயல் - காண்போரை பதற வைக்கும் வீடியோ

இவனுங்க சரிப்பட்டு வரமாட்டானுங்க என நினைத்ததோ என்னவோ, அந்த சிங்கம் பட்டென்ன கார் கதவை திறந்துவிட, உள்ளே இருப்பவர்கள் அலறும் சப்தத்தோடு வீடியோ முடிய, நமக்கு சப்த நாடியும் அடங்கியது.

21, 2020

நாம யார் வம்புக்கும் போறதில்ல... யார் தும்புக்கும் போறதில்ல...

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: