சாலையில் ஓடும் வெள்ளநீர்; தம்பி, தங்கையை உப்பு மூட்டை தூக்கிச் சென்ற அண்ணன் – வைரல் வீடியோ

இதுவரை இந்த வீடியோவை சுமார் 60 ஆயிரம் நபர்கள் வரை பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

viral videos, trending viral videos, online viral videos, videos

Tamil Viral video updates : ஆபத்து வரும் சூழலில் நண்பர்கள் யார் என்பது மட்டுமல்ல நல்ல உறவினர்கள் யார் என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். வீட்டின் மூத்த பிள்ளைகளாக பிறந்துவிட்டால் நமக்கு அடுத்து பிறக்கும் தங்கை, தம்பிகளை பல நேரங்களில் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மூத்த குழந்தைகளுக்கு வந்துவிடுகிறது. அண்ணன், அக்கா என்ற பேதம் ஏதும் இல்லாமல் இருவரும் தன்னுடைய தம்பி தங்கையருக்கு பல சூழலில் பாதுகாப்பு அரணாக திகழ்வார்கள். அதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக் காட்டு என்று தான் கூற வேண்டும்.

வீட்டுக்கு வந்த மலை சிங்கத்தை வரவேற்ற குட்டி நாய்; வைரலாகும் வீடியோ

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மூன்று குட்டிச் சுட்டிகள் சமத்தாக சாலையில் நடந்து செல்கின்றன. ஆனால் சாலையின் குறுக்கே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. உடனே மூன்று பேரும் நின்றுவிடுகின்றனர். அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் அந்த வீடியோவின் ஹைலைட்

முதலில் தங்கையை உப்புமூட்டை தூக்கிச் சென்று அருகில் இருக்கும் படிக்கட்டில் நிற்க வைத்துவிட்டு அடுத்து தன்னுடைய தம்பியை அதே போன்று உப்புமூட்டை தூக்கிச் செல்கிறான் அந்த குட்டி “அண்ணன்”. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை சுமார் 60 ஆயிரம் நபர்கள் வரை பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil viral video updates elder brother carries his siblings to cross the road full of water

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express