தெலுங்கானா மாநில ஆளுநரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி ஒருவருக்கு உதவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழிசை சவுந்தரராஜன் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து காயம் அடைந்துள்ளார். செய்தியை அறிந்த உடனே தமிழிசை சவுந்தரராஜன் ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு முதல் உதவி சிகிச்சையும் அளித்துள்ளார் தெலுங்கானா ஆளுநர். வடபழனியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர் அந்த பெண்மணிக்கு உரிய சிகிச்சைகளை உடனே வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
தேனி மாவட்டத்தில் கொண்டாடப்படும் தம்பிரான் தொழு மாட்டுப் பொங்கல் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கீழே விழுந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்து அவரின் மயக்க நிலையை தெளிய வைக்க ஆளுநர் முயற்சி செய்ததும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. பண்டிகை நாளின் போது மக்கள் சேவையில் ஈடுபட்ட ஆளுநருக்கு மக்கள் பலரும் தங்களின் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
பின்னர், தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டையை கிளப்பும் ஏறுதழுவல்… நாட்டு மாடுகள் பவனி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – வீடியோக்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “