Thai pongal 2020 vadivelu memes : வாழ்க்கைல எவ்வளவு நல்லது கெட்டது நடந்தாலும் அத அப்டியே ஜெஸ்ட் லைக் தட்டுனு தட்டிவிட்டுட்டு போய்ட்டே இருக்கனும். இதைத்தான் நம்முடைய ஆசான் வடிவேலு உலக மக்கள் அனைவருக்கும் சொல்லிருக்காரு. அதனால தான் எங்க என்ன பிரச்சனை நடந்தாலும் வடிவேல வச்சே உலகத்துக்கு கருத்து சொல்றதையும், பலருக்கு எதிர்ப்பு சொல்றதையும் பழக்கமா வச்சுருக்கோம் நாம.
கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...
பொங்கல் வேற வந்துருச்சு. பொங்கல் பரிசு தர்றோம்னு கவர்மெண்ட் சொன்னாலும் சொல்லுச்சி எங்கன திரும்புனாலும் நாந்தான் தெரியுறேன்னு வடிவேலே வருத்தப்பட்டுருப்பாரு. அவ்வளவு மீம்ஸ்களை பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் சிறப்பான பொங்கல் கொண்டாட்டம் போய்கிட்டு தான் இருக்கு. இந்த வருசம் நெட்டிசன்கள் மத்தியில் ஹிட் அடித்த பொங்கல் மீம்ஸ் இதோ உங்களுக்காக. வயிறு வலிக்க வெடிச்சு சிரிச்சு சந்தோசமா இருந்தா அதுக்கு நாங்க தான் பொறுப்பு என்பதை கூறிக் கொண்டு!
இந்த பொங்கலின் போது ஆம்பளைங்க எல்லாம் சுவத்துக்கு வெள்ளையடிக்க, பொண்ணுங்க எல்லாம் பாத்திரம் வெளக்கன்னு இருந்த காலமெல்லாம் மலையேறிடுச்சு. அம்மா தான் கொஞ்சம் பாவம். ஆனாலும் அவங்க படுற அவஸ்தையெல்லாத்தையும் சும்மா நறுக்கு நறுக்குனு சிரிச்சுக்கிட்டே சிந்திக்க வைக்குற அளவுக்கு வேற லெவல்ல மீம்ஸ் கிரியேட் பண்ணி ட்ரெண்ட் பண்ணிவிட்டுட்டு இருக்காங்க!
அப்பறம் இந்த வருசம் யாரெல்லாம் பொங்கலுக்கு ஊருக்கு போனது ராசாக்களா?
அம்மா பாவம்!
அட கரும்பு தானங்க எடுத்துக்கிட்டு போவட்டும்... நம்ம பசங்க... நமக்கு அவங்களும், அவங்களுக்கு நாமளும் ஒருத்தருக்கு ஒருத்தரு ஒரு ஒத்தாசை தான!
அன்பான மீம்ஸ் கிரியேட்டர்களே, நீங்க யாரோ, எவரோ, யார் பெத்த பிள்ளையோ... எங்கனயோ இருந்துக்கிட்டு எல்லாருக்கும் வாழ்த்து சொல்ற தெய்வம்யா நீ... நல்லா இரு... உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!
ஐ.டி. கம்பெனி பரிதாபங்கள்... இருக்கட்டும்... எல்லாம் வாழ்க்கைல சகஜம் தானே!
மேலும் படிக்க : தமிழர் திருநாளில் தமிழர்களின் வீர விளையாட்டுகள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.