30 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள்... WWWன் பிறந்தநாளை டூடுளுடன் கொண்டாடும் கூகுள்!

இன்று 2 பில்லியன் இணைய தளங்கள் செயல்பட்டு கொண்டுள்ளன.

Today Google Doodle Celebrates World Wide Web’s 30th anniversary : முப்பது வருடங்களில் தனி மனித மற்றும் நிர்வாக வளர்ச்சியில் இணையத்தின் பங்கு இன்றியமையாதது.

இன்று World Wide Web (WWW)-ன் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுள் தங்களின் ஹோம் பேஜ்ஜில் இந்த கார்ட்டூனை வெளியிட்டுள்ளது, ஆப்பிரிக்காவின் சில பாகங்களைத் தவிர உலகில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இந்த இமேஜ் இன்று டிஸ்பிளே ஆகும்.

Today Google Doodle Celebrates World Wide Web’s 30th anniversary

இணையத்தையும் World Wide Web (WWW)-ம் குழப்பிக் கொள்ள வேண்டாம் மக்களே. World Wide Web (WWW) என்பது எச்.டி.எம்.எல் மற்றும் எச்.டி.டி.பி. போன்ற parameterகளால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.  ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்த கணினியில் உலகம் இயங்குவதாக இன்றைய கூகுள் டூடுள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12, 1989ம் ஆண்டு மென் பொருள் ஆராய்ச்சியாளர் சர். டிம் பெர்னெர்ஸ்-லீ முதல் ப்ரவுசரான வேர்ல்ட் வைட் வெப் அப்ளிகேசனை உருவாக்கினார். இன்று 2 பில்லியன் இணைய தளங்கள் செயல்பட்டு கொண்டுள்ளன.

மேலும் படிக்க : ஒரே நேரத்தில் சிறுத்தைப் புலி மற்றும் கருஞ்சிறுத்தையை புகைப்படம் எடுத்து அசத்திய தமிழக இளைஞர்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close