இதெல்லாம் இவான்கா வீட்டுக்காரருக்கு தெரிஞ்சுதன்னு வைங்க! உங்களோட ஒரே அக்கப்போருடா...

இந்த மீம்களுக்கு எல்லாம் சிறிதும் சளைக்காத இவன்கா, அந்த மீம்களுக்கு ரெஸ்பான்ஸ் செய்ததோடு மட்டுமின்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

இந்த மீம்களுக்கு எல்லாம் சிறிதும் சளைக்காத இவன்கா, அந்த மீம்களுக்கு ரெஸ்பான்ஸ் செய்ததோடு மட்டுமின்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ivanka Trump flaunts ‘new friends’ she made in India

Ivanka Trump flaunts ‘new friends’ she made in India

Ivanka Trump flaunts ‘new friends’ she made in India :  அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து கடந்த மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்தார். அவருடன் அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப், வெள்ளை மாளிகை மூத்த ஆலோசகர் ஜரேட் குஷ்னர், அதிபரின் மகள் மற்றும் அவருடைய பி.ஏவுமான இவான்கா ட்ரம்ப் ஆகியோர் இந்தியா வருகை புரிந்தனர். இவர்கள் முதலில் அகமதாபாத் சென்றனர். பின்னர் அன்று மாலை ஆக்ராவில் இருக்கும் தாஜ்மகாலை காணச் சென்றனர்.

Advertisment

மேலும் படிக்க : அழகுக்கு மேலும் அழகு சேர்த்த இந்திய காதி… ஜனாதிபதி மாளிகையில் இவான்கா!

தாஜ்மஹாலின் அழகில் திளைத்த இவான்கா ட்ரம்ப் அங்கே புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த புகைப்படங்களை போட்டோஷாப் மூலம் எடிட் செய்து தெறிக்கவிட்டுள்ளனர் மீம் கிரியேட்டர்கள்.  இந்த மீம்களுக்கு எல்லாம் சிறிதும் சளைக்காத இவன்கா ட்ரம்ப், அந்த மீம்களுக்கு ரெஸ்பான்ஸ் செய்ததோடு மட்டுமின்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

இதற்கு இவான்காவின் ரெஸ்பான்ஸினை பார்த்தவுடன், மீம் கிரியேட்டர்களுக்கு கன்டெண்ட் கிடைத்து போல் ஆகிவிட்டது. அவர்கள் தொடர்ந்து மீம்களை ஆன்லைனில் பதிவு செய்ய, இவான்கா தாயகம் திரும்பிய பின்னும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

டொன்லாட் ட்ரம்பினையும் கிரியேட்டர்கள் விட்டுவைக்கவில்லை  என்பதை காட்ட மேலே இருக்கும் இந்த ஒரு ட்வீட்டே போதும்.

மீம்மாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா... நம்மைப் பற்றியும் நம்முடைய நாட்டைப் பற்றியும் வெளிநாட்டினர் என்ன சிந்திப்பார்கள் என்பதையும் கொஞ்சம் யோசியுங்கள் மீம் கிரியேட்டர்களே!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Donald Trump

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: