Viral News: 60 நொடி செலவழிக்காமல் இதில் புலி இருப்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது!
நீங்களும் எங்களைப் போன்று குறுகுறுவென ஒரு இரண்டு நிமிடங்கள் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு கமெண்ட்டில் எங்கே இருக்கிறது என்று தேடினால், உங்களுக்கு ஒரு ஹைஃபைவ்..
Trending viral iconic image : புலிகளே இல்லாத காட்டுக்கு ஏன் புலிகள் காப்பகம் என்று பெயரிட வேண்டும் என்று அதிகமாக “டோஸ் வாங்கியது” தம்பா புலிகள் காப்பகம். ஏன் என்று கேட்கின்றீர்களா? 2018ம் ஆண்டு அந்த காடு முழுவதும் முழு வீச்சில் புலிகளுக்கான கணக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் புலிகள் இருப்பதற்கான ஒரு அறிகுறியும் இல்லை… ஆதாரமும் கிடைக்கவில்லை அன்றில் இருந்து தம்பாவிற்கான இந்த அங்கீகாரம் பயங்கர கேள்விக்கு ஆளானது.
Advertisment
ஆனால் தற்போது புலிகள் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் அங்கு பணியாற்றும் ஜக்குமா டான். சில மாதங்களுக்கு முன்பு வைல்ட் லைஃப் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியாவிடம் இருந்து கேமரா ட்ராப்பை வாங்கிச் சென்று அங்கே பொறுத்தியுள்ளார். மூன்று மாதங்கள் கழித்து கேமராவை எடுத்து பார்த்த போது அதில் அவருக்கு ஆனந்தமும் அதிர்ச்சியும் தருகின்ற புகைப்படம் ஒன்று இருந்தது. அதனை மேலிடத்திற்கு அனுப்பி, புலிகள் அந்த காட்டில் இருப்பதை உறுதி செய்தார்.
ஆனாலும் அந்த புகைப்படத்தில் புலி இருப்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. நீங்களும் எங்களைப் போன்று குறுகுறுவென ஒரு இரண்டு நிமிடங்கள் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு கமெண்ட்டில் எங்கே இருக்கிறது என்று தேடினால், உங்களுக்கு ஒரு ஹைஃபைவ்.. கமெண்ட் பார்க்காமல் கண்டு பிடித்திருந்தால் நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி என்பதை நாங்கள் மனமாற ஏற்றுக் கொள்கின்றோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil