Unaware of the owner’s death, the dog waits at Wuhan hospital for three months
Unaware of the owner’s death, the dog waits at Wuhan hospital for three months : சீனாவில் இருக்கு வுஹான் பகுதியில் வசித்து வந்த ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவருடைய நாயும் மருத்துவமனைக்கு வந்தது. இந்நிலையில் 5 நாட்கள் கூடாத ஆகாத நிலையில் அந்த நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் அந்த நாய் குட்டியோ அதே மருத்துவமனையில் நாள் கணக்கில் காத்துக் கொண்டிருந்தது. பிப்ரவரி மாதம் துவங்கி மூன்று மாத காலங்களாக அந்த நாய் அந்த மருத்துவமனையை சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தது.
அந்த மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர்கள் அந்த நாய்க்கு தேவையான உணவுகளை வழங்கி வந்தனர். ஊரடங்கிற்கு பிற்கு மருத்துவமனை கேண்டீனை திறந்த கேண்டீன் உரிமையாளர் அந்த நாய்க்கு சியோ பாவ் என்று பெயர் வைத்துள்ளார்.
Loyal #dog waits at a #Wuhan hospital for 3 months after his owner dies from covid-19
7-yo dog Xiao Bao waited patiently for his owner at Wuhan hospital.Staff at Wuhan Taikang Hospital fed Xiao Bao
Xiao’s owner died 5 days after being admitted pic.twitter.com/H31Ls2Dsrh
அந்த நாயின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவ, ஜப்பானில் இருந்த நாய் ஒன்றினை சியோ பாவுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். ஜப்பானில் தன்னுடைய எஜமானர் இறந்தது கூட தெரியாமல் காத்திருந்த நாய் ஒன்று 9 வருடங்கள் கழித்து இறந்து போனது.
சியோ பாவ் சமத்தாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து சேட்டைகள் செய்து கொண்டிருந்தது. எங்கே கொண்டு போய் விட்டாலும் திரும்பி மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தது. அதனால் மருத்துவமனை ஊழியர்கள் அந்த நாய் குட்டியை வுஹானில் இருக்கும் நாய்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
இந்த நாய்க்குட்டியின் அன்பும், காத்திருப்பும் நெட்டிசன்களை மிகவும் நெகிழ வைத்துள்ளது. எங்கிருந்தாலும் சியோ பாவ் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.