Trending viral photo of Leopard : அசாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தியின் புறநகர் பகுதியில் உலா வந்த சிறுத்தைப் புலி ஒன்று அங்குள்ள 20 அடி கிணற்றில் விழுந்துவிட்டது. அதனை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைப் புலியின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வருங்காலம் இதை நம்பித் தான்; பறக்கும் காரின் வைரல் வீடியோ
புகைப்படத்தை பார்க்கும் போது சிறுத்தைப் புலி உயிருக்கு பயந்திருப்பது போல அல்ல. அதன் பார்வை நமக்கு மிரட்சி ஏற்படுத்துகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தை 7500க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 469 நபர்கள் இதனை ரீட்விட் செய்துள்ளனர். புறநகர் பகுதிகளில், உபயோகமின்றி இருக்கும் கிணறுகளை எல்லாம் மூட வேண்டும் நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil