அரபிக் கடலில் உருவாகும் புயல்; ஊருக்குள் புகுந்த கடல் நீர் - புகைப்படத் தொகுப்பு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எர்ணாக்குளத்தில் உள்ள பூதத்தன்கேட்டு அணையில் இருந்து மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எர்ணாக்குளத்தில் உள்ள பூதத்தன்கேட்டு அணையில் இருந்து மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Trending Viral Photos of Sea incursion in Chellanam, Ernakulam, Kerala

 அரபிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காராணமாக இன்று தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நாளை (15/05/2021) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் , காரைக்கால் போன்ற பகுதிகளில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

இன்றைய வானிலை அறிக்கை தொடர்பான முழுமையான தகவல்களையும் படிக்க

Trending Viral Photos of Sea incursion in Chellanam, Ernakulam, Kerala
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 15ம் தேதி அன்று அரபிக் கடலில் நிலைக் கொண்டிருக்கும் தாழ்வு அழுத்தம் புயலாக உருமாறும் என்று அறிவித்திருந்தது.
Trending Viral Photos of Sea incursion in Chellanam, Ernakulam, Kerala
தென்கிழக்கு அரபிக் கடலில் கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதாலும் சூறைக்காற்று வீசும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருந்தது.
Advertisment
Advertisements
Trending Viral Photos of Sea incursion in Chellanam, Ernakulam, Kerala
இந்நிலையில் கடல் கொந்தளிப்பின் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் கேரள கடற்கரை கிராமங்களில் அச்சம் நிலவி வருகிறது. எர்ணாக்குளம் செல்லானம் கடற்கரை கிராமங்களில் காலை முதலே கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வந்தது.
Trending Viral Photos of Sea incursion in Chellanam, Ernakulam, Kerala
சில கிராமங்களில் கடல்நீர் உள்ளே புகுந்துள்ளது. அதன் புகைப்படங்கள் சில உங்களுக்காக. எக்ஸ்பிரஸ் புகைப்படம் : நிதின் ஆர்.கே.
Trending Viral Photos of Sea incursion in Chellanam, Ernakulam, Kerala
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எர்ணாக்குளத்தில் உள்ள பூதத்தன்கேட்டு அணையில் இருந்து மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: