Viral Video of a Pigeon ‘Battling’ with an Escalator Handrail Leaves Internet Baffled : மனிதர்கள் தான் மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள் என்பதெல்லாம் பொய். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.ரெடிட் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் புறா ஒன்று, எஸ்கலேட்டரின் கைப்பிடியில் பயணித்துக் கொண்டு வருகிறது. நான் கூட, நாமெல்லாம் படிக்கட்டின் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டு சறுக்கி வருவோமே, அது போன்று தான் இதுவும் என்று நினைத்தேன்.
மேலும் படிக்க : கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொலை: அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொடுத்தனர்
ஆனால் இது ஒருபடி மேலே போய் ட்ரெட்மில்லில் ஓடுவது போல ஓடிக் கொண்டு விளையாடி வருகிறது. வெளியில் சுற்றி சுற்றி களைத்துப் போன இந்த புறாவுக்கு இது ஒரு எண்டெர்டெய்மெண்ட் போல. ஹேண்ட்ரெயிலில் இருந்து நழுவி கீழே சென்ற புறா, மீண்டும் கொஞ்சம் தூரம் பறந்து சென்று மேலே அமர்ந்து கொண்டு மீண்டும் ட்ரெட்மில்லில் நடைபயிற்சியை செய்ய துவங்கியது. ரொம்ப க்யூட்டா இருக்குது தானே இந்த வீடியோ. இது குறித்து நீங்கள் உங்களின் கமெண்ட்டினை கீழே தெரிவிக்கலாம். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே 1.3 மில்லியன் நபர்கள் இந்த வீடியோவை கண்டு ரசித்து தங்களின் கருத்தினை பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Trending viral video of a pigeon battling with an escalator handrail leaves internet baffled