Trending viral video of cat : குவாரண்டைன் காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்து தங்களின் திறமைகளையெல்லாம் வெளிப்படுத்தி வருகின்றனர். நல்ல நாட்களிலேயே இந்த டிக்-டாக் சுகவாசிகளை கையில் பிடிக்க முடியாது. அதுவும் இப்படி வாரக் கணக்கில் வீட்டில் இருக்க சொன்னால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சமையல், நடிப்பு என அனைத்து கலையையும் ஒன்றாக கலந்துகட்டி இறக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க : ஆனாலும் பூனைக்கு இவ்வளவு செல்லம் ஆகாதுப்பா!
ஆனாலும் வீட்டில் இருக்கும் ஜீவராசிகள் எல்லாம் (டிக்டாக் செய்யாத அனைவரும் தான்) பாவம் தான். இது போன்று மேல்மாடி காலியாக இருக்கும் நபர்களுடன் எத்தனை நாட்கள் தான் குப்பை கொட்டுவது என அவர்களும் நினைத்திருப்பார்கள் தானே.
கில்லா காயே என்ற டிக்-டாக் பயனர் ஒருவர், தன்னுடைய லேப்டாப் முன்பு அமர்ந்து, தான் கற்றுக் கொண்ட மொத்த வித்தைகளையும் பாட்டாக பாடிக் கொண்டிருந்தார். அவரின் குரல் என்னவோ இனிமையாக தான் இருக்கிறது. ஆனால் இவரின் பாடலை கேட்டு எரிச்சல் அடைந்த, அவருக்கு அருகே இருக்கும் பூனை, தன்னுடைய காலால் அந்த பெண்ணின் வாயில் ஒரே அடி. பாடலை நிறுத்திவிட்டு சிரிக்க துவங்கி விட்டார்.
மேலும் படிக்க : அப்பாவை சைக்கிளில் அமர்த்தி 1200 கி.மீ பயணம் ; 15 வயது சிறுமியின் பாசப் போராட்டம் வென்றது!
இந்த வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்ட அவர், பூனைக்கு இந்த பாடல் பிடித்திருக்கும் என்று தான் நினைத்தேன் என்று மேற்கோள் காட்டியிருக்கிறார். இந்த பாடலுக்கும், பூனையின் ரியாக்சனுக்கும் கருத்து கூறி வருகிறார்கள் டிக்டாக் சுகவாசிகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“