New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/12/Children-plays-in-mud.jpg)
கொரோனா ஊரடங்கால் தங்களின் குழந்தைப் பருவத்தை தொலைத்துள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் தேவைப்படும் “ப்ரேக்” இது என்றும் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
trending viral video of children playing in mud : கர்நாடகாவின் கடலோர மாவட்டமான மங்களூருவில் ஒரு வித்தியாசமான திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கேசர்ட் ஒஞ்சி தினம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவில் பெரியர்வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சேற்றில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஏ.என்.ஐ. நியூஸ் ஏஜென்சி வெளியிட்ட வீடியோ ஒன்றில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இந்த சேற்றில் மூழ்கி விளையாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
#WATCH | Karnataka: Children & women participated in 'Kesard Onji Dina' (a day in slushy water) earlier today, organized by Vijaya Yuva Sangama at Yekkur in the outskirts of Mangaluru pic.twitter.com/7wvvNAlpcU
— ANI (@ANI) December 5, 2021
இந்த வீடியோவை இதுவரை 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் தங்களின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். கொரோனாவின் ஒமிக்ரான் தொற்று பரவி வருகின்ற நிலையில் இது போன்ற திருவிழாக்கள் தேவை தானா என்ற கேள்வியையும் பலரும் கேட்டு வருகின்றனர்.
எஜமானருடன் சேர்ந்து புஷ்-அப் செய்யும் நான்கு கால் நண்பன் – வைரல் வீடியோ
Nice for kids to enjoy after staying inside for over a year.
— Abhishek (@the_malakas) December 5, 2021
Aah.. feel like playing football ⚽️ in that! 😝 https://t.co/2Cn5pFmHsJ
— Amma Pakoda (@ammapakoda) December 5, 2021
கொரோனா ஊரடங்கால் தங்களின் குழந்தைப் பருவத்தை தொலைத்துள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் தேவைப்படும் “ப்ரேக்” இது என்றும் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்டில் பதிவு செய்யவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.