Viral video of dog’s workout with his caretaker : உண்மையில் நான்கு கால் நண்பர்கள் போன்று நல்ல ஜீவன்கள் கிடையவே கிடையாது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூட நாய்களை செல்லப் பிராணிகளாக வைத்திருக்கும் குடும்பங்களில் மன அழுத்தம் மற்றும் இருதயம் சார்ந்த நோய்கள் வருவது மிகவும் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.
ஏய் தள்ளு தள்ளு தள்ளு தள்ளு… வடிவேலு ரேஞ்சுக்கு விமானத்தை தள்ளிய பயணிகள் – வைரல் வீடியோ
நல்ல நண்பர்கள் என்றால் நாய்கள் மட்டும் தான். விளையாட்டிற்கும் சரி. அதற்கு ஏற்ற துணை உலகில் வேறேதும் இல்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்பு தன் எஜமானருடன் யோகா செய்த நாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது சாலையில் அமர்ந்து கொண்டு தன்னை வளர்க்கும் மனிதர் செய்யும் உடற்பயிற்சி அனைத்தையும் கொஞ்சம் கூட அச்சு பிசகாமல் செய்து வருகிறது அந்த நாய்.
நாயை வளர்க்கும் அந்த நபர் நாய்க்கு சில அடிகள் முன்னாள் நின்று கொண்டு உடற்பயிற்சி மேற்கொள்ள புஷ்-அப் உள்ளிட்ட பல உடற்பயிற்சிகளை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகிறது அந்த நாய்.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோவை இதுவரை 36 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
ஆதரவற்ற நாய்களுடன் மைதானத்திற்கு வந்த கால்பந்தாட்ட வீரர்கள் – நெகிழ்ச்சி வீடியோ