Advertisment

25 மீட்டர் நீளத்திற்கு வலை பின்னும் டார்வின் பார்க் சிலந்தி - பிரம்மிக்க வைக்கும் வீடியோ

எஃகு உலோக இழைகளைக் காட்டிலும், வலிமையான இழைகளை உடலில் இருந்து உற்பத்தி செய்து வலை பின்னுகிறது இந்த சிலந்தி.

author-image
WebDesk
New Update
Trending viral video of Darwins bark spider spinning web

இயற்கை மிகவும் அழகானது மட்டும் இன்றி மிகவும் ஆச்சரியங்களையும் அளிக்க கூடியது. ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாக்க, தான் தகவமைத்துக் கொள்ளும் பண்புகளும் மிகவும் அருமையானது. அந்த வகையில் இன்று கூடு கட்டும் சிலந்தியின் மாபெரும் உழைப்பை இந்த வீடியோவில் நாம் காண உள்ளோம்.

Advertisment

டார்வின் பார்க் ஸ்பைடர் ( Darwin’s bark spider) என்று அழைக்கப்படும் இந்த சிலந்தி, உலகிலேயே மிகப்பெரிய அளவில் வலைகளை பின்னும் சிலந்திகள் ஆகும். குறிப்பாக பெண் சிலந்திகள், கிட்டத்தட்ட 25 மீட்டர் நீளத்திற்கு வலை அமைப்பை உருவாக்கி அதில் பயணிக்கும் தன்மை கொண்டவை.

பி.பி.சி. எர்த் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தி ஹண்ட் சீரிஸ் வீடியோவில் இந்த சிலந்தி குறித்த மிகவும் அரிதான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் வர்ணனையாளர் டேவிட் ஆட்டன்பர்க். தன்னுடைய நீண்ட பாலத்தில் மற்ற சிலந்தி பயணிக்கும் போது அதனை பாதியிலேயே உடைத்துவிட்டு திரும்பும் தன்மை கொண்ட இந்த சிலந்தி, தன் உடலில் இருந்து வெளியேறிய அந்த வலை பகுதியை வீணாக்காமல் உண்டுவிடும் இயல்பைக் கொண்டதாம்.

எப்படி இருந்த மனுஷன் தெரியுமா? நீலக்கலர் சொக்காவும் கழுத்துச் சங்கிலியுமாக ரன்வீரின் ட்ரெண்டிங் புகைப்படங்கள்

இந்த சிலந்தியின் உடலில் இருந்து வெளியேற்றப்படும் இந்த நூலிழை உலகிலேயே மிகவும் வலிமையான, எஃகு இழைகளைக் காட்டிலும் மிகவும் வலிமையான இழையாகும். இதன் செயல்களை பார்க்கவும், இது குறித்த தகவல்களை கேட்கவும் மிகவும் பிரம்மிப்பு அளிக்கிறது என்றால் மிகையல்ல. இதுவரை இந்த வீடியோவை 13 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது குறித்து உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment