இந்த செல்லப்பிராணி போல் யாராலும் நிச்சயமாக யோகா செய்ய முடியாது – வைரல் வீடியோ

இன்று கொஞ்சம் நீங்கள் சிடுசிடுவென்று இருந்தால் நிச்சயமாக இந்த வீடியோ உங்களின் மனதை மாற்றும் என்பதற்கு நாங்கள் கேரண்ட்டி.

Trending viral video of dog perfectly mimicking owner during yoga session

Trending viral video of dog doing yoga : வளர்ப்பு பிராணிகளில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. ஏன் என்றால் நாம் அவைகளை நம்முடைய குடும்ப உறுப்பினர்களாக பார்ப்பதோடு மட்டும் இல்லாமல் நம் அன்றாட வாழ்வில் நல்லதையும் கெட்டதையும் பகிர்ந்து கொள்ள தேடும் நண்பர்களாகவும் இருப்பார்கள்.

சில நேரங்களில் நாய்கள் பாட்டுபாடும் வீடியோக்கள், தன்னுடைய எஜமானரை நீண்ட ஆண்டுகள் கழித்து சந்திக்கும் வீடியோக்கள் மற்றும் தன் இறந்து போன எஜமானருக்காக காத்திருக்கும் செய்திகள் நம் மனதில் ஆழமாக பதிவதும் உண்டு. ஆனால் இன்று இந்த வீடியோ சற்று வித்தியாசமானது. இன்று கொஞ்சம் நீங்கள் சிடுசிடுவென்று இருந்தால் நிச்சயமாக இந்த வீடியோ உங்களின் மனதை மாற்றும் என்பதற்கு நாங்கள் கேரண்ட்டி.

மேலும் படிக்க : சானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர்; யாருன்னு பாருங்க… அசந்துருவீங்க

17ம் தேதி அன்று புய்டென்கெபிடன் என்ற ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றில் நாய் தன்னுடைய எஜமானருடன் யோகா செய்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. யோகா மேட்டை விரித்து அதில் தன் எஜமானர் செய்யும் அதே ஆசனங்களை அந்த நாய் செய்து வருவது பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 4 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்ட இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of dog perfectly mimicking owner during yoga session

Next Story
சானியா மிர்சாவிற்கு ஏற்ற ஜிம் பார்ட்னர் – வைரலாகும் வீடியோTrending Viral Video of Sania Mirzas 2-year-old son helping her with practice
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com