New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/E1vd5UMVkAgXp72.jpg)
கூர்க் மலைப்பகுதியில் உள்ள சைத்பூரில் குழியில் விழுந்த யானையை ஜே.சி.பி. உதவியுடன் அங்கிருந்து வனத்துறையினர் மீட்டனர்.
Trending viral video of Elephant fighting with JCB loader : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை துவங்கும் காலம் ஆகிவிட்ட நிலையில் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. காடு மற்றும் மலைப்பிரதேசம் முழுவதும் ஈரமாக இருக்கின்றன. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கூர்கில் உள்ள சைத்பூரில் ஆண் யானை ஒன்று சறுக்கி பள்ளத்தில் விழுந்துவிட்டது.
மேலும் படிக்க : அட சேத்துக்குள்ள சிக்கிக் கொண்ட யானையை இப்படியா காப்பாற்றுவது?
அதனை பத்திரமாக மீட்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். குழியில் இருந்து பாதிதூரம் மேலே வந்துவிட்ட நிலையில், மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்தது. அப்போது மீட்பு பணிக்காக கொண்டுவந்த ஜே.சி.பி. வாகனத்தின் மண் அள்ளும் முன்பகுதியை யானையின் பின்புறம் வைத்து அழுத்தம் கொடுத்து மேலேற்றியது.
Saidpur Coorg. God bless them pic.twitter.com/T9ox9jhpmf
— satish shah🇮🇳 (@sats45) May 19, 2021
அந்த யானை மேலே ஏறி வந்தவுடன், கோபத்தில் ஜே.சி.பியின் முன்பகுதியை முட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜே.சி.பியுடன் சண்டையிட்ட யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து அந்த பகுதியில் இருந்து அகற்றினர். 19ம் தேதி அன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவான இந்த வீடியோவை கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.