New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/04/cats-22.jpg)
Trending viral video of kid reading pandemic status as TN health secretariat Beela Rajesh
பிஞ்சு மொழியில் மழலை தமிழில் அவர் வாசிக்கும் அந்த ஸ்டேட்டஸை கேட்பதே அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.
Trending viral video of kid reading pandemic status as TN health secretariat Beela Rajesh
TN health secretariat Beela Rajesh : கொரோனா வைரஸ் நோய் தமிழகத்தில் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நடுவே இணைப்பு பாலமாக செயல்பட்டு அப்டேட் குறித்த தகவல்களை வெளியிட்டு வருபவர் நமது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.
அவரின் தொடர் அர்ப்பணிப்பு மற்றும் வேலையில் முழு ஈடுபாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று தந்துள்ளது. இவரின் ஆடைகள் உட்பட அனைத்தும் மக்களை கவரும் வண்ணத்தில் இருப்பதை பல்வேறு கமெண்ட்களில் நாமே படித்து தெரிந்து கொண்டோம்.
மேலும் படிக்க : ஏழைகளுக்கு உதவுவதை போட்டோ எடுக்க ராஜஸ்தானில் தடை; முதல்வர் எச்சரிக்கை
பீலா ராஜேஷ் மக்கள் மனதில் எவ்வளவு இடம் பெற்றிருக்கிறார் என்றால், ஒரு குட்டி குழந்தை அவரைப் போன்றே புடவை அணிந்து கையில் ஒரு அறிக்கை துண்டை வைத்து இன்றைய கொரோனா வைரஸ் தமிழக ஸ்டேட்டஸை படிக்கும் அளவிற்கு. பிஞ்சு மொழியில் மழலை தமிழில் அவர் வாசிக்கும் அந்த ஸ்டேட்டஸை கேட்பதே அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. கொரோனா ஒரு கொலைகார நொயல்ல என்று சொல்லும் அளவிற்கு அவ்வளவு க்யூட். அந்த க்யூட்டான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.