New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/tumblr_p2lo4hGUc71suq39vo1_1280.jpg)
Trending viral video of Lichen katydid makes netizens crazy
நம் வாழ்நாள் அனைத்தையும் காடுகளில் செலவழித்தாலும் கூட காடுகளின் ரகசியத்தை அறிந்துகொள்ளவே முடியாது.
Trending viral video of Lichen katydid makes netizens crazy
இந்த இயற்கை எவ்வளவு அழகானதோ அவ்வளவு மர்மம் நிறைந்ததும் கூட. நம் வாழ்நாள் அனைத்தையும் காடுகளில் செலவழித்தாலும் கூட் காடுகளின் ரகசியத்தை அறிந்துகொள்ளவே முடியாது. அது தான் உண்மையும். ஆயிரக்கணக்கான செடிகள், நூற்றுக்கணக்கான பறவையினங்கள், பூச்சிகள், ஊர்வனங்கள், இதில் ஏதேனும் ஒன்றைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கவே வருசக்கணக்காகும்.
சமீபத்தில் இணையத்தில் வெளியான 44 நொடி வீடியோ காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வெட்டுக்கிளி போன்ற உயிரினம் ஒன்றின் வீடியோ அது. இதற்கு முன்பு அப்படி ஒரு பூச்சியை நம் வாழ்நாளில் நாம் பார்த்திருக்கவே மாட்டோம். பார்ப்பதற்கு இலை போலவும், மிகவும் அழகான பச்சை நிற கிளைகளுடனும் காட்சியளிக்கிறது அந்த பூச்சி.
#Nature has filled every detail with precisel. Details which many a times we don't observe. Video by Maria Chacon. Believe me you have never seen such creature till now. #AmazingNature pic.twitter.com/jy0h9za8o0
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 16, 2020
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான். இந்த வீடியோவ அவரு ட்விட்டர் பக்கத்துல ஷேர் செய்யவும் அதற்கு எக்கச்சக்க வரவேற்பு கொடுத்திருக்காங்க நெட்டிசன்ஸ். அந்த பூச்சி பத்தி நெறைய பேருக்கு ஒன்னுமே தெரியல.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
இந்த பூச்சியின் பெயர் லிச்சென் காட்டியிட் (Lichen katydid) இது பானெரோப்டெரைனே (Phaneropterinae) என்ற துணைக் குடும்பத்தை சேர்ந்த பூச்சியினமாகும். இது பொதுவாக தென் அமெரிக்காவில் இந்த பூச்சியினம் அதிக அளவில் காணப்படுகிறது. கேமஃப்லாஜ் (camouflage) எனப்படும் சூழ்நிலைக்கு ஏற்றப்படி தன் உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை இந்த வெட்டிக்கிளி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.