ஒருவேளை 5 ஆந்தைகள் ஒன்றாக இருந்தால் இப்படித் தான் இருக்குமோ? வைரல் வீடியோ

இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்! இவை உயிருள்ள ஆந்தைகளா அல்லது சிலையா என்பதை நீங்கள் எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Trending viral video of owl sculptures : நாம் ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து குழப்பம் அடைவது இயற்கையானது தான். ஆனால் அந்த வீடியோவில் வரும் உண்மையா பொய்யா என்று அறிந்து கொள்வதற்குள் தலையே சுற்றிவிடும்.

வனத்துறை அதிகாரி ப்ரவீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மரங்களை பாதுகாக்க மேலும் 5 காரணங்கள் என்று கூறி மரப்பொந்தில் ஐந்து ஆந்தைகள் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு நிஜமான ஆந்தைகளைப் போன்றே இருக்கும் அந்த ஐந்து சிற்பங்களையும் பார்த்தால் நாம் அப்படியே அதை உண்மை என்று நம்பி விடுவோம்.

என்னா அடி! ரொம்ப கோவக்கார “மம்மியா” இருப்பாங்க போல – வைரல் வீடியோ

ஸ்காட் ராத்கே என்ற புகைப்ப்படக் கலைஞர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் ஐந்து ஆந்தைகள் நம்மையே உற்று பார்த்துக் கொண்டிருப்பது போன்று ஒரு மாய பிம்பம் தோன்றும். இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இதில் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் நம்மைப் போன்றே பலரும், இது நிஜமா பொய்யா என்ற கேள்வியோடு அந்த ட்வீட்டில் பலரும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்! இவை உயிருள்ள ஆந்தைகளா அல்லது சிலையா என்பதை நீங்கள் எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of owl sculptures on the tree hollow

Next Story
என்னா அடி! ரொம்ப கோவக்கார “மம்மியா” இருப்பாங்க போல – வைரல் வீடியோViral video , Trending viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com