Advertisment

கொரோனாவில் இருந்த மீண்ட அக்காவை குத்தாட்டம் போட்டு வரவேற்ற தங்கை (வைரல் வீடியோ)

அவருடைய அக்கா குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து திரும்பி வரவும் அவரை வரவேற்கும் விதமாக ஆட்டம் ஆடி கொண்டாடி வரவேற்பு ஒன்றை கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
Jul 20, 2020 16:22 IST
Trending viral video of sister dancing to welcome her sister who has hospitalized for covid19

Trending viral video of sister dancing to welcome her sister who has hospitalized for covid19 : கொரோனா வைரஸ் தற்போது இந்தியா முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையிலும் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒருவித மன அழுத்தத்தில் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வரும் சகோதரியை நடனம் ஆடி வரவேற்கும் தங்கையின் வீடியோ மகிழ்ச்சி அளிக்கிறது.

Advertisment

மேலும் படிக்க :மனநலம் பாதித்த தாய்… தேநீர் கடையில் பணியாற்றும் தந்தை; +2 தேர்வில் சாதித்த இரட்டையர்கள்!

 

இந்தியாவிலேயே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தான் அதிக அளவு நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையை தொடர்ந்து புனேவிலும் அதிக நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க : திருமணமான 22 நாட்களில் கொரோனாவால் உயிரிழந்த புது மாப்பிள்ளை!

இந்நிலையில் சலோனி என்ற பெண்ணின் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சலோனி சாத்புட் தவிர மற்ற அனைவருக்கும் பாஸிடிவ் வரவே அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவருடைய அக்கா குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து திரும்பி வரவும் அவரை வரவேற்கும் விதமாக ஆட்டம் ஆடி கொண்டாடி வரவேற்பு ஒன்றை கொடுத்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது நிச்சயமாக நேர்மறை எண்ணங்களை மக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Social Media Viral #Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment