பசிக்கு சாப்பிடணும்… இது நமக்கு மட்டுமல்ல, பாம்புகளுக்கும் பொருந்தும்

பாம்புகள் ஆபத்து என்று உணரும் போதும் இவ்வாறு சாப்பிட்ட உணவை வெளியேற்றும்

Trending viral video of snake : ஒவ்வொரு நாளும் வன உயிரினங்களின் செயல்பாடுகள், சேட்டைகள், ரசிக்க வைக்கும் நிகழ்வுகளை நாம் வைரல் பிரிவில் பார்த்து, ரசித்து வருகின்றோம். சமயத்தில் பாம்பு புகைப்படங்கள், வீடியோக்கள் கூட மக்களிடம் நல்ல வரவேற்பையும், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களையும் கற்று தருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பாம்பு ஒன்று தான் விழுங்கிய முட்டைகளை மீண்டும் வாய்வழியே வெளியேற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது. உங்களின் ஜீரண சக்திக்கு அதிகமானதை உட்கொள்ளாதீர்கள் என்று அவர் கேப்ஷன் ஒன்றை எழுதி இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். மேலும் பிடிக்கப்பட்ட இந்த பாம்பு பத்திரமாக வனத்திற்குள் விடப்பட்டது எந்த தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

கேன்களில் இருந்து பாலைக் குடிக்கும் யானை; சேட்டைய பாத்தீங்களா?

8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்ந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். பலர் தங்களின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். அதில், பாம்புகள் ஆபத்து என்று உணரும் போதும் இவ்வாறு சாப்பிட்ட உணவை வெளியேற்றும் என்றும், ஆபத்து காரணமாக வெகு தூரம் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது மந்தமான வயிறு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trending viral video of snake throws eggs it swallowed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com